தமிழகத்தில் இன்று
தாக்கப்பட்டாரா கோவை குண்டுவெடிப்புக் கைதி ஊம்பாபு?
கோவை:
கோவையில் தொடர் குண்டுவெடிப்பில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊம்பாபு சிறையில் பயங்கரமாகத்தாக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 180 பேர் மேல்வழக்குத் தொடரப்பட்டது. அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர்அப்துல் நாசர் மதானி, ஊம்பாபு ஆகியோர் உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை கோவை தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 167 பேரும்கோவைக்குக் கொண்டு வரப்பட்டு மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றம்சுமத்தப்பட்ட 167 பேரில் ஊம் பாபு தவிர பிற166 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவர் ஏன் ஆஜராகவில்லை என்பதற்கான காரணம் தற்போதுதெரியவந்துள்ளது.
கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அதே சிறையில் மற்றொரு அறையில்அடைக்கப்பட்டிருந்த சிலர் ஊம்பாபுவைச் சந்திக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம்கேட்டனர். அவர்கள் அனுமதி கொடுத்த பின் ஊம்பாபு தன்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியவர்களை நேரில்சென்று சந்தித்தார். அப்போது அந்தக் கைதிகள் ஊம்பாபுவை சுற்றிவளைத்து சராமரியாகத் தாக்கியதாகத்தெரிகிறது. இதில் ஊம்பாபு காயமடைந்தார்.
சிறை அதிகாரிகள் ஊம்பாபுவை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கோவைகுண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஊம்பாபு ஏற்கனவே அல்உம்மா இயக்கத் தொண்டராக இருந்தார்.ஆனால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஊம்பாபு மனதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு, நல்ல மனிதனாக பாபு மாறிவிடுவாரோ என்ற காரணத்தினால் அவரை சிறையில்அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஊம்பாபுவுக்கு தீவிரவாதிகளால்ஆபத்து ஏற்படலாம் என்பதால் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications