தமிழகத்தில் இன்று
அகதிகளின் பிணங்களை ஹெலிகாப்டரில் தேடும் போலீஸார்
சென்னை:
இலங்கை கடல் பகுதியில் மூழ்கிய இலங்கை தமிழ் அகதிகள் 21 பேரின் சடலங்களை ஹெலிகாப்டர் மூலம்போலீஸார் தேடி வருகின்றனர்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியிலிருந்து கடந்த 17-ம் தேதி படகு மூலம் 21 தமிழ்அகதிகள் ராமேஸ்வரம்நோக்கி வந்து கொண்டிருந்தனர். இலங்கை கடல்
எல்லைக்குள் வந்து கொண்டிருந்தபோதே, அகதிகள் அனைவரையும் படகை ஓட்டி வந்தவர்கள் கடலில்தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனர். இச் செய்தி காலதாமதமாகவே தமிழக அரசுக்குக் கிடைத்தது. சம்பவம் நடந்து
வெகு நாட்கள் ஆன நிலையில், அவர்களை உயிருடன் மீட்க முடியாது. அவர்களது சடலத்தையாவது மீட்கலாம்என்ற முயற்சியில் தமிழக போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ நடந்த கடல் பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல்வேட்டையில்
ஈடுபட்டு வருகின்றனர். சடலங்களைத் தேடும் பணியில் ஹெலிகாப்டரை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதுவரை தலைமன்னார் பகுதியில் மட்டும் 3 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
மற்ற சடலங்களைக் காணவில்லை. ராமேஸ்வரம் கடல் பகுதியில் சடலங்கள் ஏதும்
கரை ஒதுங்கவில்லை. பலத்த காற்று காரணமாக, இலங்கை கடற்பகுதியில் உள்ள நெடுந்தீவுப் பகுதியில்
சடலங்கள் கரை ஒதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. சடலங்களைத் தேடும் பணியில் தமிழகப்போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைமன்னார் பகுதியில் மேலும் பல சடலங்கள் ஒதுங்கியிருப்பாக இலங்கை வானொலிதெரிவித்துள்ளது. அச் சடலங்கள் கடலில் மூழ்கி இறந்த அகதிகளுடைய சடலங்களா என்று தெரியவில்லை. அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications