தமிழகத்தில் இன்று
தினகரன் அபராதத் தொகைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
அ.தி.மு.க எம்.பி தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ 28 கோடி அபராதத் தொகைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
ஜெயலலிதாவின் உயிர்த்தோழியும், சசிகலாவின் அக்கா மகனுமான தினகரன் எம்.பி.ஆவதற்கு முன்பு லண்டனில் உள்ள நிறுவனத்தில் பெரும் தொகையைமுதலீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தினகரனுக்கு ரூ 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால் தினகரன்,அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விதித்த அபராதத்தைக் கட்ட முடியாது. இது பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது என்று அமலாக்கப்பிரிவு தீர்ப்பாயத்தில்மனுச் செய்தார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு அபராதத்தொகை ரூ 31 கோடியிலிருந்து ரூ 28 கோடியாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கப்பிரிவு தீர்ப்பாயம்வழங்கிய தீர்ப்பும் தனக்கு எதிராக இருப்பதால் தனக்கு விதித்துள்ள அபராதத்தொகையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தீர்ப்பாயம் விதித்த அபராதத்தொகையைக் கட்டஇடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு மனுச் செய்தார் தினகரன்.
அமலாக்கப் பிரிவினர் 1999 ம் ஆண்டு மார்ச் மாதமே இந்தப் புகார் குறித்து விசாரித்து விட்டனர். ஆனால் விசாரணை முடிந்து ஓராண்டுக்குப்பின் தீர்ப்புவெளியிடப்பட்டுள்ளது. இது காலதாமதமான தீர்ப்பு. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் என் மீது கூறப்பட்ட புகாரை விசாரிக்க அமலாக்கப்பிரிவுஅதிகாரிகள் இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர். அந்த இருவரில் ஒருவர் சமீபத்தில் வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
ஆனால் இந்தத் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிக்கு மீண்டும் பழைய பதவி கொடுக்கப்பட்டு இந்தத்தீர்ப்பைக் கூற வைத்துள்ளனர். வேண்டுமென்றே என் மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடக்கிறது என்பது தெளிவாகிறது. இதனால் அபராதத்தொகையைக் கட்ட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தினகரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெங்கடாச்சல மூர்த்தி, ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதிகள் அபராதத் தொகைக்கு தடை விதிக்க வேண்டுமானால் உயர்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலில் ரூ 9கோடி கட்டிவிட்டு மீதி தொகைக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அதற்கு தினகரனின் வக்கீல் தங்களால் கட்ட முடியாது என்று கூறவே, இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தினகரன் மீதான 28 கோடி ரூபாய் அபராதத்தொகைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications