தமிழகத்தில் இன்று
சென்னை அருகே கோஷ்டி மோதலில் போலீஸார் காயம்
சென்னை:
சென்னை அருகே சனிக்கிழமை காலை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இன்ஸ்பெக்டர்,சப்-இன்ஸ்பெக்டர் இருவரும் காயமடைந்தனர். போலீஸ் ஜீப் மீது கல் வீசப்பட்டது.
சென்னை அருகே உள்ள துரைப்பாக்கத்தில் இச் சம்பவம் நடந்தது. சென்னைநகரில்குடிசைப் பகுதிகளில் இருந்தவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்குதுரைப்பாக்கம்
ஒக்கியம்பேட்டை அருகே கண்ணகி நகரில் குடியிருப்பு கட்டித் தரப்பட்டது.
கண்ணகி நகருக்குச் செல்ல ஒக்கியம்பேட்டை வழியாகச் செல்லவேண்டும்.இந்நிலையில், ஒக்கியம்பேட்டை வழியாகச் சென்று வந்தபோது கண்ணகிநகரைச்சேர்ந்த சில ரவுடிகள் அப் பகுதியைச் சேர்ந்த பெண்களைக் கிண்டல்செய்துள்ளனர்.
இது தவிர, அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் தராமல் தகராறுசெய்து வந்தனர். கண்ணகி நகரைச் சேர்ந்த ரவுடிகளின் அட்டகாசம் தாங்காமல் சிலநாட்களுக்கு முன் அப் பகுதியைச் சேர்ந்த 3 பேரைஒக்கியம்பேட்டையைச் சேர்ந்தமக்கள் பிடித்து அடித்துள்ளனர்.
இச் சம்பவத்தை அடுத்து இரு பகுதி மக்களிடையே வெறுப்பு இருந்து வந்தது.இந்நிலையில், ஒக்கியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதி மேம்பாட்டுவிஷயங்கள் குறித்து பேச கூட்டம் போட்டனர்.
அப்போது அங்கு வந்த கண்ணகி நகரைச் சேர்ந்த சிலர், தங்கள் குறித்துத்தான்அவர்கள்பேசுகின்றனர் என்று தவறாகக் கருதி தங்கள் பகுதிக்குச் சென்று தாக்குதலுக்குஆட்களை அழைத்து வந்தனர். சுமார் 100 பேர் கத்தி, அரிவாள்,கம்பு போன்றஆயுதங்களுடன் ஒக்கியம்பேட்டை பகுதிக்கு வந்தனர்.
திடீரென்று கூட்டத்துக்குள் நுழைந்து மக்களை அவர்கள் தாக்கினர். இருதரப்பினரும்கடுமையா மோதிக் கொண்டனர். மோதல் பெரிய கலவரமாக மாறியது. 5ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த ஹோட்டல்மற்றும் 15 வீடுகள்சூறையாடப்பட்டன. சில வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
இது குறித்து உடனே போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. சம்பவஇடத்துக்குஇன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில்போலீஸார் விரைந்து வந்து கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
அவர்கள் மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பால்ராஜ்,சம்பத்இருவரும் காயமடைந்தனர். அவர்கள் வந்த ஜீப் மீது கல்வீசப்பட்டது.காயமடைந்தஇருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து உடனே ஆயுதப்படைப் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.அவர்கள்சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இச் சம்பவம்தொடர்பாகஇரு தரப்பிலும் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக சம்பவ இடத்தில் 200-க்கும் அதிகமான போலீஸார்நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது அங்கு பதற்றம் தணிந்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications