தமிழகத்தில் இன்று
படகுக்காரர்கள் கடலில் தள்ளியதில் 21 அகதிகள் சாவு
ராமேஸ்வரம் :
ராமேஸ்வரம் தப்பி வந்த அகதிகளை, கடற்படை வீரர்களுக்குப் பயந்து நடுக்கடலில் படகுக்காரர்கள் தள்ளி விட்டதில், 21 அகதிகள் பரிதாபமாகஇறந்தனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் கடும் போரைத் தொடர்ந்து அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழககடற்கரை நகரான ராமேஸ்வரத்திற்கு வந்தபடி இருக்கின்றனர்.
தலைமன்னாரிலிருந்து கள்ள படகுகளில் தலைக்கு ரூ 10 ஆயிரம், ரூ 15 ஆயிரம் என்று பணம் கொடுத்து அவர்கள் தப்பி வருகிறார்கள். இந்தக் கள்ளப்படகுகளுக்கு இந்திய கடல் எல்லைக்குள் அனுமதி இல்லை. எனவே கடல் எல்லையை ஒட்டிய சிறு மணல் திட்டுகளில் இவர்களை இறக்கி விட்டுபடகுக்காரர்கள் தப்பி விடுகிறார்கள்.
இலங்கையின் தலைமன்னார் பகுதியில், இலங்கை கடற்படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிளிநொச்சியைச்சேர்ந்த 21 பேர் தலைமன்னாரிலிருந்து படகு மூலம் கடந்த 24 ம் தேதி தமிழகம் கிளம்பி வந்துள்ளனர். இதேபோல, 25 ம் தேதி 12 பேர் தப்பித்துவந்தனர்.
இவர்களில் தலைமன்னாரைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்து விட்டனர். ஆனால் கிளிநொச்சியிலிருந்து வந்து 21 பேரும் ராமேஸ்வரத்தைஅடையவில்லை. அவர்களது நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 3 பேரின் பிணங்கள் மிதந்து வந்ததைப் பார்த்தனர். அதேபோல் தலைமன்னார் கடற்கரையோரத்தில் 18 பிணங்கள் கரை ஒதுங்கின.
இதுகுறித்து நடந்த விசாரணையில், 24 ம் தேதி 21 பேரும் தப்பித்து வந்து கொண்டிருந்த போது இலங்கைக் கடற்படை வீரர்கள் மிரட்டியுள்ளார்கள். இதனால்பயந்த படகுக்காரர்கள் 21 பேரையும் நடுக்கடலில் தள்ளி விட்டுவிட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications