தமிழகத்தில் இன்று
"உலகத்தை வீழ்த்த கைகோர்த்த "எதிரிகள்
லண்டன்:
இந்திய, பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்கள் சேர்ந்து ஒரே அணியில் சேர்ந்து விளையாட முடியுமா?. முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள்இந்த "எதிரிகள்.
இலங்கையில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தபோது ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் வன்முறையைக் காரணம்காட்டி இலங்கைக்கு வர மறுத்தபோது, இந்திய, பாகிஸ்தானிய வீரர்கள் இணைந்த அணி இலங்கை சென்றது. அங்கு நடந்த "சும்மா போட்டியில் இலங்கைஅணியுடன் மோதினர்.
இப்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள் இந்த முன்னாள் "சகோதரர்கள். சனிக்கிழமை இவர்கள் சேர்ந்த ஆசிய அணிக்கும், ரெஸ்ட் ஆப் வேர்ல்ட்அணிக்கும் இடையே லண்டனின் ஓவல் மைதானத்தில் காட்சிப் போட்டி நடந்தது. இதில் "சகோதரர்கள் அணி தோல்வியுற்றது. ஆனால் அதுமுக்கியமல்ல. "உலகத்தைத் தோற்கடிக்க இவர்கள் சேர்ந்து முயன்றதுதான் விஷயம்.
இந்திய, பாகிஸ்தானிய ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து, தங்கள் நாட்டுக் கொடிகளை அசைத்தபடி தங்களது வீரர்களுக்கு ஆதரவு தந்தது வித்தியாசமானகாட்சியாக இருந்தது. பார்த்தாலே முறைத்துக் கொள்ளும் இவர்கள் இப்போட்டியின்போது நட்புடன் காணப்பட்டது பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.
முதலில் ஆடிய ஆசிய அணி 204 ரன்கள் சேர்த்தது. நிகில் சோப்ரா சிக்ஸ் அடித்தபோது பாகிஸ்தானிய ரசிகர்கள் கொடியசைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர். சக்லைன்முஷ்டாக் விக்கெட் வீழ்த்தியபோது, இந்தியர்கள் பங்க்ரா ஆடி உற்சாகம் கொடுத்தனர். வாசிம் அக்ரமும், ஸ்ரீநாத்தும் பந்துவீச்சைத் துவக்கினர். சிலஓவர்களிலேயே ஆளுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது. பிறகு வந்தனர் சக்லைனும், கும்ப்ளேவும்.
இவர்கள் தவிர அஸாருதீன், நயன் மோங்கியா, இலங்கையின் அரவிந்த டிசில்வாவும் ஆசிய அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திரங்கள் ஆவர்.
பின்னர் ஆடிய ரெஸ்ட் ஆப் வேர்ல்ட் அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. நாதன் ஆஸ்ட்லே 51 ரன்கள் சேர்த்தார். ஆசிய அணித் தரப்பில் டிசில்வா 35ரன்களும், அஸார் 33 ரன்களும், சோப்ரா 30 ரன்களும் சேர்த்தனர். சக்லைனுக்கு நான்கு விக்கெட்டுகள் கிடைத்தன. சோப்ராவுக்கு 2 கிடைத்தது.
இந்தப் போட்டியில் ஆசிய அணி தோல்வியுற்றது பெரிய விஷயமில்லை. ஆனால் முறைத்துக் கொண்டு திரியும் இரு நாடுகளும் கைகோர்த்தபடி மைதானத்தில்திரிந்ததைப் பார்ப்பது சந்தோஷமான விஷயம்தானே!.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications