400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
ஜாதியில் தில்லுமுல்லு: திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு
சென்னை:
தாராபுரம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரஸ்வதிக்கு எதிராக, சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி ரிசர்வ்தொகுதியாகும். இத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்சரஸ்வதி.
இவருக்கு எதிராக தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மனோகரன், சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மனோகரன் தாக்கல் செய்த மனு விவரம்:
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தனித் தொகுதியாகும். இங்கு ஆதி திராவிடர்மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.
ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சரஸ்வதி, ஆதி திராவிடர் சமுதாயத்சைச் சேர்ந்தவர் அல்ல. அவர்பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்றுதெரியவந்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் தன்னை தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்று கூறி தேர்தலில்போட்டியிட்டு சரஸ்வதி வெற்றி பெற்றுள்ளார். தான் தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்தவர் என்பதற்கான போலி ஆணவங்களையும் தேர்தல் அதிகாரியிடம் அவர்சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பாக சரஸ்வதி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம்புகார் கொடுத்தேன். ஆனால், அந்தப் புகார் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
ஆகவே, சரஸ்வதி மீது வழக்குப் பதிவு செய்யும்படி போலீஸாருக்குஉத்தரவிடவேண்டும் என்று மனோகரன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அக்பர் பாட்சா காதிரி, இம் மனு மீதுஇரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications