400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
நக்கீரன் கோபால் யார்?
பெங்களூர்:
சாதாரண லே அவுட் ஆர்ட்டிஸ்டாக இருந்த ஆர்.ஆர்.கோபால் இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபராக மாறியுள்ளார். காரணம் - வீரப்பன்.
தராசு வாரப் பத்திரிக்கையில் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தவர் ஆர்.ஆர்.கோபால் எனப்படும் ஆர்.ராஜகோபால். முறுக்கு மீசையுடன், துடிப்புடன்பேசும் கோபால், இயற்கையிலேயே துணிச்சல் மிக்கவர். இந்தத் துணிச்சல்தான் பின்னாளில் நக்கீரன்ஆரம்பித்து, அதற்கு ஜெயலலிதா பதவிக்காலத்தில்ஏற்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க அவருக்குத் தைரியம் கொடுத்தது.
ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களை மிக தைரியமாக வெளியிட்டார். இதனால் பல தொல்லைகளுக்கு உள்ளானார். அரசும், போலீசும் இவரைதொடர்ந்து மிரட்டியும் தனது பாணியை இவர் கைவிட்டதில்லை.
ஒருமுறை இவரது அலுவலகத்தில் நுழைந்த குண்டர்கள் ஊழியர்களை கடுமையாகத் தாக்கினர். அச்சுப் பிரிவில் பணியாற்றி வந்த ஒருவரை மாடியிலிருந்துதூக்கி கீழே எறிந்தனர். இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார். இதற்கு ஜெயலலிதா தான் காரணம் என கோபால் குற்றம் சாட்டினார்.ஆனாலும் தொடர்ந்து ஊழல்களை அம்பலப்படுத்தி வந்தார்.
நக்கீரன் ஆரம்பித்த காலத்தில் கோபால் பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியம் யாருக்குமே சிக்காத சந்தனக்கடத்தல் வீரப்பனை, காட்டுக்குள் போய்ப் பார்த்து அது படத்துடன் செய்தியாக வந்தபோது அனைவரின் கவனமும் நக்கீரன் மேல் பதிந்தது.
பின்னர் கோபாலே நேரில் சென்று வீரப்பனைப் போய்ச் சந்தித்து வந்து இன்னும் பரபரப்பூட்டினார். அதற்குப் பிறகு பலமுறை காட்டுக்குள் சென்றுவீரப்பனைப் பார்த்துள்ளார் கோபால்.
வீரப்பன் யாரையாவது கடத்திக் கொண்டு போய்விட்டால் உடனே கோபாலின் பெயர் அடிபடும். கோபால்தான் வீரப்பனைச் சந்தித்துகடத்தப்பட்டவர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழும். அந்தளவுக்குப் பெயர் பெற்றார் கோபால்.
வீரப்பனிடம் ஒருமுறை பேசி சரண்டர் வரைக்கும் அவனைச் சம்மதிக்க வைத்தார். ஆனால் வீரப்பன் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டான். கடைசியாகபிரபல புகைப்படக்காரர்கள் சேனானி உள்பட 17 பேரை வீரப்பன் கும்பல் பிடித்துச் சென்றபோது, அவர்களை கோபால்தான் வீரப்பனிடம் பேசி மீட்டுவந்தார்.
ஒருமுறை அரசுக்குத் தெரியாமலேயே வீரப்பனைச் சந்தித்தார் கோபால். இதற்கு மாநில அரசு கண்டனம் தெரிவித்தபோது, தான் செய்தது சரிதான்என்றார். அப்போது கோபால் அளித்த பேட்டியில், போலீஸ் பிடியில் சிக்கி பரிதாபமாக தவிக்கும் அப்பாவி கிராம மக்களைக் காக்கும்நோக்கத்துடன்தான் நான் வீரப்பனைச் சந்திக்கப் போனேன்.
வீரப்பன் ராஜ்யம் நடக்கும் வனப் பகுதியில் மொத்தம் ஆறு லட்சம் மக்கள் உள்ளனர். இங்கு 175 கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும் முதுமலைவனத்தின் 6000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளன. இங்கு முகாமிட்டுள்ள கர்நாடக, தமிழக அதிரடிப் படை வீரர்கள், கிராம மக்களை அடிக்கடி அடித்துத்துன்புறுத்தி, வீரப்பன் குறித்து கேட்டு வருகின்றனர்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டால் அதற்காக நான் கண்ணீர் வடிக்க மாட்டேன். ஆனால் வீரப்பன் பெயரில் அப்பாவி கிராம மக்களைக்கொடுமைப்படுத்துவதை முதலில் போலீஸார் நிறுத்த வேண்டும்.
வீரப்பனுக்கு கிராமங்களில் நல்ல ஆதரவு உள்ளது. 80 சதவீத மக்கள் அவனை ஆதரிக்கின்றனர். மிகப் பெரிய நெட்வொர்க்கே அவனிடம் உள்ளது.அவர்கள் யார் என்பதை நான் கூற மாட்டேன் என்றார் கோபால்.
இப்போது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஸ்பாட்லைட்டுக்கு வந்துள்ளார் கோபால். ஆனால் பெரம்பலூரில் நக்கீரன் நிருபர்கொல்லப்பட்ட நிலையில், அவர் வீரப்பனைச் சந்திக்கக் காட்டுக்குப் போவது தடைபட்டுள்ளது.
கோபால், காட்டுக்குச் சென்று, வீரப்பனைப் பார்த்துப் பேசிய பிறகுதான் வீரப்பனின் உண்மையான கோரிக்கை என்ன என்பது தெரிய வரும். அந்தக்கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படுவதைப் பொறுத்தே கர்நாடகத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் மனதில் எழுந்துள்ள அச்சமும்அகலும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications