400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
மீண்டும் மதிப்பிடப்படுகிறது ஜெ.வின் ரூ.4 கோடி நகைகள்
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ரூ. 4 கோடி மதிப்புள்ள நகைகள் மீண்டும் மதிப்பிடப்பட உள்ளன. இதற்கான உத்தரவை சிறப்புநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் பிறப்பித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் மீது சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புப்போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ் வழக்கு ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகளை மதிப்பீடு செய்த அரசு மதிப்பீட்டாளர் வாசுதேவன், நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியம்அளித்தார். அப்போது ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் நகைகள் ரூ. 4 கோடி மதிப்புள்ளவை என்று தெரிவித்தார்.
இந் நிலையில், ஜெயலலிதாவும் சசிகலாவும் சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
1996-ம் ஆண்டு எனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறைப் போலீஸார் சோதனை நடத்தியபோது கைப்பற்றிய நகைகள் ரிசர்வ் வங்கி பாதுகாப்பில்வைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த நகைகள் தொடர்பாக சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டியுள்ளது.
ரூ.5 லட்சத்துக்கு மேல் நகைகளின் மதிப்பு இருந்தால் சொத்து வரி சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மதிப்பீட்டாளர்களைக் கொண்டு நகைகளை மதிப்பீடுசெய்யவேண்டும். ஏற்கெனவே நகைகளை மதிப்பீடு செய்த வாசுதேவன், பதிவு பெற்ற மதிப்பீட்டாளர் அல்ல. ஆகவே, பதிவு பெற்ற வேறுமதிப்பீட்டாளரை வைத்து நகைகளை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கை மனுவை ஏற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், பதிவு பெற்ற மதிப்பீட்டாளரைக் கொண்டு ஜெயலலிதா, சசிகலா ஆகியோரதுநகைகளை மீண்டும் மதிப்பீடு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னையைச் சேர்ந்த பினாவ் எச். மேத்தா என்பவர் நகைகளை மதிப்பீடு
செய்வார். நகைகளை மறு மதிப்பீடு செய்ய ரிசர்வ் வங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியில் வைத்தே மதிப்பீடு செய்ய வேண்டும்.
10 நாட்களுக்கு நகைகளை மறு மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான செலவுமுழுவதையும் மனுதாரர்கள் ஏற்கவேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications