இந்த வாரம்
நிருபர் கொலை: திருச்சி கலெக்டர் மீது நக்கீரன் குற்றச்சாட்டு
சென்னை:
பெரம்பலூரில் நக்கீரன் வார இதழ் நிருபர் செல்வராஜ் கொலையில் திருச்சி மாவட்டக் கலெக்டருக்கும்பங்கிருக்கலாம் என்று நக்கீரன் குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சியில் பெரம்பலூர் டவுனில் வசித்து வந்தவர் செல்வராஜ். வயது 40. நக்கீரன் வாரப்பத்திரிக்கை நிருபரானஇவர் திங்கள்கிழமை இரவு அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்போது அலுவலக வாசலில் காரில் வந்திறங்கிய 8 பேர் கும்பல் செல்வராஜை சராமரியாக வெட்டிக் கொன்றது.
பின்னர் அக்கும்பல் காரில் ஏறித் தப்பித்துச் சென்றனர். அதற்குள் போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. காரைத்துரத்திச் சென்ற போலீஸார் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணை நடத்தி இக்கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஜாபர், சிவபாலன், கருணாநிதி, செம்பியன், சிவா, ரகுமான், சக்திவேல், சுப்ரமணியம் உள்பட 9 ரெளடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஜாபரும், சிவாவும் திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் காசுக்காக கொலை செய்யும் கூலிக் கும்பலை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் செல்வராஜ் கொலை வழக்கில் திருச்சி மாவட்டக் கலெக்டருக்கு தொடர்பிருக்கலாம் என்று நக்கீரன்குற்றம்சாட்டியுள்ளது.
நிருபர் செல்வராஜ் திருச்சியில் நடந்து வரும் மணல் திருட்டு குறித்து நக்கீரன் வாரப் பத்திரிக்கையில் தொடர்கட்டுரை எழுதி வந்தார்.
இதை எழுத வேண்டாம் என்றும் பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கலெக்டர் மூர்த்தி கூறிவந்தார் என்று நக்கீரன் பத்திரிக்கை கூறியுள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் கொலை செய்யப்பட்டிருப்பதால் கலெக்டர் மூர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்குநக்கீரன் சார்பில் வாய் மொழிப்புகார் கூறப்பட்டுள்ளது என்று அந்தப் பத்திரிக்கை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications