இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
வீரப்பனை பிடிக்க கமாண்டோக்களை அனுப்ப சொல்கிறார் சுவாமி
பாண்டிச்சேரி:
வீரப்பனை பிடிக்க கமாண்டோக்களை அனுப்ப வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
பாண்டிச்சேரியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், வீரப்பனுடன் பேசுவதற்கு நக்கீரன் கோபாலை அனுப்பியிருக்கக் கூடாது. அதற்குப் பதில் கமாண்டோ படைகளை அனுப்பி வீரப்பனைபிடிக்க வேண்டும்.
திமுக, அதிமுக இல்லாத மூன்றாவது அணியை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது தொடர்பாக சோனியா காந்தி, மூப்பனார்ஆகியோருடன் பேசியுள்ளேன்.
மூன்றாவது அணி அமைந்தால் தான் தமிழகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. இதன் மூலம் கூட்டணி ஆட்சிக்கு வழிபிறக்கும். அக்டோபர் அல்லது நவம்பருக்குள் மூன்றாவது அணி குறித்த விவரம் தெரிந்துவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications