இந்த வாரம்
குற்றாலத்தில் சாரல் விழா
சென்னை:
தமிழக அரசு சார்பில் குற்றாலத்தில் சாரல் விழா தொடங்கியது.
குற்றாலத்தில் உள்ள கலைவாணர் கலையரங்கில் நடைபெற்ற இவ் விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் குத்து விளக்கு ஏற்ற, கலை நகழ்ச்சிகளை ஆதிதிராவிடர் நிலத்துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இவ் விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசுகையில்,
தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக்குப் பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளிநாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 2கோடி பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்குத்தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்துகொடுத்துள்ளது.
குற்றாலத்தில் ரூ.11.5 லட்சம் செலவில் படகுக் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.67.15 லட்சம் செலவில் தமிழ்நாடு ஹோட்டலும் கட்டப்பட்டுள்ளது.
இது தவிர, திருவிடைமருதூரில் ரூ. 4 லடசம் செலவில் அடிப்படை வசதிகளும்,பாபநாசத்தில் ரூ. 5 லட்சம் செலவில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளனஎன்றார்.
சாரல் விழாவையொட்டி குற்றாலத்தில் தமிழக செய்தி,மக்கள் தொடர்புத் துறை சார்பில்அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை வரை இச் சாரல் விழா நடைபெறும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications