இந்த வாரம்
அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் சட்டத்தை டிஸ்மிஸ் செய்க!: கருணாநிதி
டெல்லி:
மாநில அரசுகளைத் தேவையில்லாமல் டிஸ்மிஸ் செய்ய வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.
டெல்லியில் நடக்கும் மாநிலங்களுக்கிடையிலான கவுன்சிலின் துணைக் குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக திமுக வலியுறுத்தி வருகிறது.
இந்த சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் மாநில அரசுகளின் மீது சட்டவிரோதமாக தனது அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்துவதாகிறது.அமெரிக்கா போன்ற வல்லரசு உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலுமே இதுபோன்ற சட்டம் இல்லை.
சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் கூட, இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதிமொழி அளித்துள்ளார். இருசம்பிரதாய சட்டமாகவே இது இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இது மிகப் பெரிய ஆயுதமாகவே இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேறு வழியில்லாத சூழ்நிலையில் பிரயோகப்படுத்துவதற்காகவே இந்த சட்டத்தை அரசியல் சிற்பிகள் வடித்தனர். ஆனால் இப்படி மாறும் என்றுஅவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. நாடாளுமன்றத்தில் டிஸ்மிஸ் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகே டிஸ்மிஸ் செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் உள்ளது. இருப்பினும் லோக்சபாவில் ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி இருந்து விட்டால், அதிலும் சிக்கல்தான்.
மொத்தத்தில் இந்த சட்டத்தை அறவே நீக்குவதுதான் நல்லது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications