இந்த வாரம்
கிராம போஸ்ட் ஆபிஸ்களுக்கு வருகிறது இ-மெயில்
கோவை:
கிராமங்களில் உள்ள போஸ்ட் ஆபீசுகளில் இ-மெயில் வசதியை உருவாக்க அரசுபரிசீலனை செய்து வருகிறது என தமிழ்நாடு தலைமை தபால் அதிகாரி கோவையில்தெரிவித்தார்.
கோவையில் புதன்கிழமையன்று தபால்தலைக் கண்காட்சி துவங்கியது. இந்தக்கண்காட்சியில் மேற்கு மண்டல அஞ்சல் துறை அதிகாரி விமலா குமார் வரவேற்புரைநிகழ்த்தினார்.
இதில், தமிழ்நாடு முதன்மைத் தலைமை தபால் அதிகாரி வி. பி மேனன் கூறியதாவது:
நாடு ழுவதும் தபால்தலைக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுதமிழகத்தில 7 இடங்களில் தபால் தலைக் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக்கண்காட்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழ்நிலையில் ஸ்டாம்ப் மற்றும் கவர் போன்றவற்றின்தேவை குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் தபால் தலைக் கண்காட்சி 1973, 1980,1989, 1993 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் தபால் அலுவலகம் அதைமுன்னோடியாக நின்று செயல்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் ஒரு வலைத்தொடர்பை கொண்டுள்ள பெரிய நிறுவனம் தபால் துறை தான்.
மாறிவரும் தகவல் தொழில்நுட்ப சூழ்நிலையில், கம்ப்யூட்டர் வசதியில்லாதகிராமங்களில் கூட இ மெயில் வழங்க அரசு அஞ்சல் துறையை நவீனப்படுத்தவுள்ளது.தபால் அலுவலகங்கள் அனைத்திலும் கம்ப்யூட்டர் வசதியும், நவீனமயமாக்கும்முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
பின்னர் நிருபர்களிடம் மேனன் கூறுகையில், தபால் துறையில் தபால்களைக்கையாளும் திறனோ, தபால்கள் எண்ணிக்கையோ இதுவரை குறையவில்லை. நாடுமுழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அஞ்சலகங்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.
வீடுகளிலிருந்து தபால்கள் செல்வது குறைந்தாலும், நிறுவனங்கள் அனுப்பும் தபால்கள்அதிகரித்து வருகின்றன. கூரியர் சர்வீஸ்கள் கூட தற்போது தபால் அலுவலகங்களைப்பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனால், நாட்டின் அனைத்து இடங்களுக்கும் தபால்சென்றடைய வாய்ப்பு ஏற்படுகிறது.
தபால் பொருட்கள் அச்சிடுவதில் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நஷ்டம்ஏற்பட்டு வருகிறது. இது விரைவில் சரி செய்யப்படும். சேமிப்பு வங்கியைப்பொருத்தவரை தபால் அலுவலகங்கள் தான் முன்னிலை வகித்து வருகின்றன. ஒருலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து சேமிப்பு நிதியாகப்பெற்றுள்ளது. இதில் 80 சதவீதம் மாநிலங்களின் வளர்ச்சிக்காக கடனாக வழங்கிவருகிறது.
எனவே, வரும் காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் எவ்விதத்திலும் தபால் துறைபாதிக்கப்படாது. மாறாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில், முன்னோடியாகச்செயல்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications