காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உட்பட 5பேர் சாவு
ராஜ்குமார் வீட்டில் குவியும் ரசிகர்கள், பிரமுகர்கள்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிற்கு ஆறுதல் கூறுவதற்காக அவரது வீட்டிற்குஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
ராஜ்குமாரும், மூன்று பேரும் சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பலால் ஞாயிற்றுக்கிழமைகடத்தப்பட்டனர். இதையடுத்து கர்நாடகமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடிகர் ராஜ்குமார் வீடு இருக்கும்பெங்களூர் சதாசிவ நகர் மக்கள் வெள்ளத்தால் திணறிக் கொண்டுள்ளது.
ராஜ்குமார் வீடு உள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தினசரி நூற்றுக்கணக்கானோர் வீட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். புதன்கிழமையும் பல முக்கியப்பிரமுகர்கள் ராஜ்குமார் வீட்டிற்கு வந்து அவரது மனைவி பர்வதம்மாவைச் சந்தித்து ஆறுதல்கூறினர்.
மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் பசவராஜ் பொம்மை, நடிகர் ஸ்ரீநாத் மற்றும் பலர் புதன்கிழமைபர்வதம்மாவைச் சந்தித்தனர். ஹூப்ளியிலிருந்து வந்திருந்த சிலர், ராஜ்குமாருடன் சேர்த்துக் கடத்தப்பட்டுள்ளஇயக்குநர் நாகப்பாவை விடுவிக்க பர்வதம்மா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களிடம், ராஜ்குமார் தனியாகத் திரும்பி வர மாட்டார். அவருடன் கூட இருப்பவர்களையும்அழைத்துக் கொண்டுதான் வருவார். பயப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதல்வரும், நடிகர் ராஜ்குமாரின் சம்பந்தியுமான, பங்காரப்பா கூறுகையில், ராஜ்குமார்கடத்தல் பிரச்சினைக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து திட்டம் தீட்டவேண்டும். நெருக்கடியான இந்த நேரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறினார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications