இந்த வாரம்
வீரப்பனின் நிபந்தனை பொதுமன்னிப்பு
கோவை:
கன்னடத் திரைப்பட உலகின் முக்கிய பிரமுகரான டாக்டர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற வீரப்பன் இந்த முறைவைக்கப் போகும் கோரிக்கை கோடிக்கணக்கில் பணம் அல்ல, பொது மன்னிப்பு தான் கேட்பான் என போலீஸ்உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நக்கீரன் கோபால் வீரப்பனைச் சந்திக்க புதன்கிழமைகாலை காட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது சகாக்களை வீரப்பன் கடத்திச் சென்றுள்ளான்.
பல முறை ஆள்கடத்தல் வேலையில் ஈடுபட்டு, கைதேர்ந்துள்ளான் வீரப்பன். கடந்த முறை பல ஆட்களைக்கடத்திய போதிலும், அவனது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமல் தோல்வியையே சந்தித்து வந்தான். ஆனால்,இம்முறை திட்டமிட்டு முக்கிய பிரமுகரைக் கடத்திச் சென்றுள்ளான். எனவே, ராஜ்குமாரை விடுவிக்க, வீரப்பன்கோடிக் கணக்கில் பணம் கேட்டு எந்த கோரிக்கையையும் அவன் வைக்கவில்லை. இம்முறை பொதுமன்னிப்புவழங்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைப்பான் என அதிரடிப்படையில் முகாமிட்டுள்ள போலீஸ் உயர்அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
காட்டிலேயே வாழ்க்கை நடத்தி சலித்துப் போன வீரப்பன், போலீசின் தேடுதல் வேட்டையில் இருந்து விடுபடவேண்டும் என்ற மனநிலையில் உள்ளான். எனவே, பொதுமன்னிப்பு கோரிக்கை இம்முறை அரசின் பரிசீலனைக்குஎடுத்துக் கொள்ளப்படலாம்.
இதே கோரிக்கையைத் தான் முன்பு நக்கீரன் கோபாலிடம் வீரப்பன் வலியுறுத்தியிருந்தான். ஆனால் இதுநிறைவேறாத பட்சத்தில் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் தயக்கம் காட்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது.ஆனால் முதல்வரைச் சந்தித்தபின்னர் நக்கீரன் கோபால், தூது செல்ல ஒப்பக் கொண்டுள்ளார். இவர், ஆகஸ்ட் 1ம்தேதி நள்ளிரவே வீரப்பனைச் சந்திக்கச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 2ம் தேதி காலைவரை காட்டிற்குள் சென்றதாக தகவல் வரவில்லை. வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த கோபாலுக்கு தேவையானஅனைத்து உதவிகளும், அதிகாரங்களையும் இரு மாநில அரசுகளும் அளித்துள்ளன.
நக்கீரன் கோபால் பேச்சுவார்த்தை நடத்த சத்தியமங்கலம் விரைந்துள்ளார். அங்கிருந்து புதன்கிழமை காலைகாட்டிற்குள் செல்லலாம். எனவே அதிரடிப்படையினர் தங்களது தேடுதல் வேட்டையை நிறுத்தி வைத்துள்ளனர்.தற்போது ராஜ்குமாரை பாதுகாப்பாக மீட்பது பற்றித் தான் அனைவரும் கவலை கொண்டுள்ளனர்.
அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications