இந்த வாரம்
ஹைதராபாத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெறும் சசிகலா
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, ஹைதராபாத்தில்ஆயுர்வேத சிகிச்சைபெறுகிறார் என்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிஆகியோர் மீது முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், எப்போதெல்லாம் விசாரணை நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் ஜெயலலிதாதவிர மற்ற 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல் வழக்கு விசாரணைக்கு சசிகலா ஆஜராகாமல்இருக்கிறார். சுதாகரன், இளவரசி இருவரும் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகி வருகின்றனர்.
கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணையின்போது சசிகலா வராததை அடுத்து அதுபற்றி நீதிபதிகேட்டார். சசிகலா ஹைதராபாத்தில் இருப்பதாகவும், ஆகஸ்ட் 2-ம்தேதி அவர் நீதிமன்றத்துக்குவருவார் என்றும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதன்படி புதன்கிழமை இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால், அப்போதும் நீதிமன்றத்தில்சசிகலா ஆஜராகவில்லை. இது பற்றி நீதிபதி கேட்டார்.
சசிகலா ஹைதராபாத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சையைஅவர்இடைவிடாமல் பெறவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதனால்தான் அவர்நீதிமன்றத்துக்கு வரவில்லை என்று சசிகலாவின் வழக்கறிஞர் செல்வானந்தம் கூறினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராகவேண்டும் என்றுஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications