இந்த வாரம்
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றார் நக்கீரன் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால், அவன் மறைந்துள்ளகாட்டுப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை மாலை சென்றார்.
அவருடன் நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் உள்பட 2 பேர் காட்டுக்குள்சென்றுள்ளனர்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் காஜனூர் என்ற கிராமத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்த பிரபல கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைதுப்பாக்கி முனையில் வீரப்பன் சில தினங்களுக்கு முன் கடத்திச் சென்றான்.
தன்னை 8 நாட்களுக்கு ஒரு அரசுத் தூதர் வந்து சந்திக்கவேண்டும் என்று கேஸட்டில்அவன் நிபந்தனை விதித்திருந்தான். இது தொடர்பாக தமிழக முதல்வர்கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனைநடத்தினர்.
அதன் பிறகு, வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபாலை மீண்டும் தூதராக அனுப்பலாம்என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கோபாலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரும் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் செல்ல சம்மதம் தெரிவித்தார்.
இதற்கிடையே, நக்கீரன் பத்திரிக்கையின் பெரம்பலூர் நிருபர் கொலைசெய்யப்பட்டார். இதையடுத்து கோபாலின் பயணத்தில் தடங்கல் ஏற்பட்டது. நிருபரின்இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட கோபால், செவ்வாய்க்கிழமை மாலை அங்கிருந்தேநேராக வீரப்பன் மறைந்துள்ள காட்டுப்பகுதிக்கு விரைந்தார்.
அவருக்குத் துணையாக நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் உள்பட 2 பேர் உடன்சென்றுள்ளனர். மூன்று பேரும் வீரப்பனைச் சந்தித்தனரா என்று தெரியவில்லை. மூன்றுபேரிடமிருந்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இந் நிலையில், சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.காட்டுக்குள் வீரப்பன் இருக்கும் இடம் மூன்று பேருக்கும் தெரியாத நிலையில்,வீரப்பனிடமிருந்து தகவல் வந்தால்தான் இவர்கள் அவனைச் சந்திக்க முடியும். அதுவரை காட்டுக்குள் இவர்கள் ஓரிடத்தில் காத்திருப்பார்கள்.
வீரப்பனைச் சந்தித்த பின்னர் அல்லது அதற்கு முன்னர் தமிழக முதல்வர் கருணாநிதிஅல்லது கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவை கோபால் தொடர்பு கொள்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள ராஜ்குமார் மற்றும் 3 பேருடைய நிலை என்ன,அவர்கள் எங்கு உள்ளனர், ராஜ்குமாரின் உடல்நிலை எவ்வாறு உள்ளது என்றதகவல்கள் இதுவரை தெரியவில்லை.
வீரப்பனை நக்கீரன் கோபால் சந்தித்த பிறகுதான் எந்தத் தகவலும் தெரியும். அதற்காககோபாலின் செய்தியை எதிர்பார்த்து அரசு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications