வீரப்பனுக்கும், கோபாலுக்கும் தொடர்புள்ளது என்கிறது "நெற்றிக்கண்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நக்கீரன் ஆசிரியர் கோபால் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றுள்ள இந்நேரத்தில் அவருக்கும், வீரப்பனுக்கும் இடையே நெருங்கிய தொடர்புஉள்ளது என்று "நெற்றிக்கண் பத்திரிக்கையின் வக்கீலும், சட்டக்கல்லூரி விரிவுரையாளருமான எஸ்.கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் நக்கீரன் மற்றும் நெற்றிக்கண் பத்திரிக்கைகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். ராஜ்குமாருடன்அவரது உறவினர்கள் மூன்று பேரும் கடத்தப்பட்டனர். இதையடுத்து கர்நாடகம் முழுவதும் கலவரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ராஜ்குமாரையும், பிற மூன்று பேரையும் விடுவிக்கும் முயற்சியில் கர்நாடகா மற்றும் தமிழக அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

நக்கீரன் ஆசிரியர் கோபால் தூதராக சென்றுள்ளார்.இந்நிலையில் வக்கீல் எஸ்.கிருஷ்ணசாமி ஒரு "குண்டைப் போட்டுள்ளார். நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், வீரப்பனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்என்று தமிழ் டி.வி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில்,

ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக வீரப்பன் மீது எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை. அதேபோல, கர்நாடகா மற்றும் தமிழக நீதிமன்றங்களில் வீரப்பன்மேல் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. வீரப்பன் மேல் 20 கொலைகள், 10 கடத்தல்கள்,மற்றும் பிற குற்றங்கள் உள்பட 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் சந்தனக் கடத்தலுக்குப் பெயர் போன வீரப்பன் மீது ஒரு சந்தனக்கடத்தல் வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

கோபாலை நம்பாத கூட்டு அதிரடிப்படைத் தலைவர் காளிமுத்து, 1998 ல் வீரப்பனை சந்திப்பதற்காக என்னை காட்டுக்கு அனுப்பினார். ஆனால் 11நாட்கள் வீரப்பன் என்னைப் பிணைக்கைதியாகப் பிடித்துக் கொண்டான். அப்போது வீரப்பனிடம் பல 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்ததைப் பார்த்தேன். இந்தநோட்டுக்கள் கோபால் மூலம் தான் வீரப்பனுக்குக் கிடைத்திருக்கும்.

தமிழக அரசு வீரப்பன் சரண் அடைந்தால் ஆயுள் தண்டனை அளிப்பதாகவும், பிறகு தண்டனைக் காலத்தைக் குறைப்பதாகவும் அறிவித்திருந்தது. வீரப்பன்சரண் அடைய ஒப்புதல் அளித்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் சரணடைய விரும்பவில்லை என்று கூறினார். கோபாலின் அறிவுரை காரணமாகத்தான்வீரப்பன் இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்று தெரிகிறது.

11 நாட்களுக்குப் பிறகு நான் விடுதலை செய்யப்பட்ட பின் உள்துறை அமைச்சர் அத்வானி, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் ஜே.எச்.பட்டேல்மற்றும் இரு மாநில அரசுகளின் தலைமைச் செயலகத்துக்கும் இதுகுறித்துக் கடிதம் எழுதினேன்.

அதேபோல, வீரப்பனுக்கு விடுதலைப்புலிகளுடனும் தொடர்பு இருக்கலாம். நான் பிணைக் கைதியாக இருந்த போது அங்கே 150-க்கும்மேற்பட்டோருக்கு தீவிரவாதம் குறித்து வீரப்பன் பயிற்சி அளித்து வந்தான்.

1991 ல் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அப்போது விடுதலைப்புலிகள் பலர்காட்டுக்குள் அடைக்கலம் புகுந்தனர். அந்த சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துக் கொண்டான் வீரப்பன். அப்போது பலருக்குத் தீவிரவாதப்பயிற்சி அளித்தான். மேலும் அவனிடம் பிணைக்கைதியாக இருந்த போது பதுங்கு குழிகளில் பல ஏக 47 ரக துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்தான்.

வீரப்பன் தன்னைக் கொள்ளைக்காரன் என்பதை விட தீவிரவாதி என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறான். சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றுஅழைக்கப்படுவதை ஒருபோதும் விரும்பவில்லை.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும்ராஜ்குமார் ஆகியோர் வீரப்பனின் ஹிட் லிஸ்ட்டில் உள்ளனர் என்றார் கிருஷ்ணசாமி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+