3-வது அணி அமைக்கும் சிந்தனையே இல்லை என்கிறார் மூப்பனார்
சென்னை:
தமிழகத்தில் 3-வது அணி அமைப்பது பற்றி சிந்தனையே இல்லை என்று தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற மூப்பனார், அங்கு சோனியா காந்தியைச்சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத்தேர்தலில் மூப்பனார் தலைமையில் 3-வது அணி அமையும் என்று கூறப்பட்டதைஅடுத்து சோனியாவை, மூப்பனார் சந்தித்தது முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
இருவரும் 3-வது அணி அமைப்பது பற்றி பேசியிருக்கலாம் என்றுகூறப்பட்டது.ஆனால் அதை மூப்பனார் மறுத்துள்ளார். நிருபர்களிடம் அவர்கூறியதாவது:
மூன்றாவது அணி என்பது ஆகாயத்தில் கட்டும் கோட்டை சோனியாவுடன் தமிழகதேர்தல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. தமிழக சட்டப் பேரவைக்கு எப்போதுதேர்தல் என்று சோனியா கேட்டார், அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என்றேன்.
த.மா.க. மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சோனியாவிடம்எடுத்துரைத்தேன். மூன்றாவது அணி பற்றி எதுவும் அவரிடம் பேசவில்லை.
தமிழகத்தில் 3-வது அணி அமைக்கும் சிந்தனைக்கே நான் வரவில்லை என்றார்மூப்பனார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications