வீரப்பனுக்கும், பாண்டிச்சேரிக்கும் என்ன தொடர்பு?
கோவை:
வீரப்பனுக்கும், பாண்டிச்சேரியில் உள்ள யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சண்முகம்கூறியுள்ளார்.
கோவையில் சோனியா காந்தியை வரவேற்க பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் வந்திருந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டிவருமாறு:
வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்குவது கர்நாடக அரசும், தமிழக அரசும் இணைந்து முடிவு செய்ய வேண்டியவை. இதில் நான் கருத்துச் சொல்லவிரும்பவில்லை. வீரப்பனிடம் இருந்து வந்த கேசட் பாண்டிச்சேரியில் எப்படிக் கிடைத்தது என்பது பற்றியும், வீரப்பனுடன் இங்குள்ளவர்களுக்குத் தொடர்புஉண்டா? என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாண்டிச்சேரியில் சமச்சீர் வரி கொண்டு வருவது பற்றி மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத் தி வருகிறோம். முக்கியமாக வசதி படைத்தவர்களுக்குமட்டும் இந்த வரி விதிக்கும் வகையில் 10 பொருட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மட்டுமே சமச்சீர் வரி பொருந்தும். இதனால் ஏழைநடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பாண்டிச் சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அதிகாரத்தில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள கூட்டணி பாண்டியில்வலுவான கூட்டணியாகும். அடுத்து வரும் தேர்தல் கூட்டணி பற்றி தலைமை தான் முடிவு செய்யும்.
பாண்டியில் முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய திட்டங்கள் மூலம் வருவாய் அதிகரிக்கப்படும்.இதற்காக பாண்டியில் வர்த்தக மையம் ஒன்றும் துவங்கப்படவுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம், துறைமுகம் மாற்றி அமைக்கப்படும்.
காவிரித் தண்ணீர் பாண்டிச்சேரிக்கு 15 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. இந்த தண்ணீரினால் எவ்வித உபயோகமும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக நல்லமழை பெய்ததால் இந்த பிரச்னை எழவில்லை. ஆனால் இந்த ஆண்டு மழை மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழகம் காவிரியில் தண்ணீர் பெற்றால்தான் நாங்கள் தண்ணீர் கேட்கமுடியும். இது குறித்து தமிழக முதல்வர் தான் முடிவு மேற் கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications