யாழ்ப்பாணத்தில் 39 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த போரில் 39 விடுதலைப்புலிகள் பலியானார்கள்.
யாழ்ப்பாணம் அருகே வன்னி பகுதியில் ஓமந்தை என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகள் மீது ராணுவ வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்தத்தொடங்கினார்கள்.
இதில் 20 விடுதலைப்புலிகள் பலியானார்கள். 10 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதே போல் வடக்கு மடுவில் பகுதியிலும் விடுதலைப்புலிகள்பதுங்கியிருந்த பதுங்கு குழிகளில் தாக்குதல் நடந்தது. இதில் 10 விடுதலைப்புலிகள் இறந்தனர்.
இது தவிர கட்டராதன், எல்துமுட்டுவால், சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த போரில் 9 விடுதலைப்புலிகள் இறந்தனர்.2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications