ஜாதிச் சங்கங்களுக்குத் தடை தேவையில்லை என்கிறார் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

ஜாதிச்சங்கங்கள் அந்தந்த சமுதாயத்துத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டால் அவைகளுக்குத் தடைவிதிக்கத் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

சேலம் வந்த இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் குறைந்துவிட்டது. இதற்குக் காரணம் 90 சதவீதம்கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டதுதான். காவல்துறை நினைத்தால் ஒரு சொட்டு கூட கள்ளச்சாராயம் கூட இல்லாத நிலை உருவாக்க முடியும். அதற்குபத்திரிக்கைகள், மாதர்சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்கள் செயல்படலாம்.

தி.மு.க தலைவரையோ, அல்லது அந்தக் கட்சியையோ ஒரு போதும் விமர்த்தது இல்லை. தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை வேகமாகசெயல்படுத்தி அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாதவர்களையே விமர்சிக்கிறேன்.

எங்களுடைய கட்சித் தொண்டர்களிடையே ஒரே ஒரு வருத்தம் உண்டு. வாழப்பாடி ராமமூர்த்தி எங்களைப் பற்றி கேவலமாக, கடுமையாக விமர்சித்ததும்,அதை முதல்வர் கருணாநிதி கண்டிக்கவில்லையே என்பதுதான். சமீபத்தில் முதல்வரைச் சந்தித்து எனது வருத்தத்தைக் கூறினேன்.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வாழப்பாடி ராமமூர்த்தி இருக்கிறாரா என்பது குறித்து முதல்வர் கருணாநிதிதான் பதில்கூற வேண்டும்.

தேசதுரோகம், விமானக்கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்க மத்திய அரசு விசாரணைஅமைப்பு ஒன்றை ஏற்படுத்தலாம்.

பாகிஸ்தான் நமக்கு எதிராக நிழல்யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் கார்கில் யுத்தம். அவர்களை நமது ராணுவம் வெற்றிகரமாகவீழ்த்தி புறமுதுகிட்டு ஓடவைத்தது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் சீர்குலைப்பதே பாகிஸ்தானின் முதல் குறிக்கோள். அதற்குஏற்றது போல் அவர்கள் நிழல்யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தனக்கடத்தல் வீரப்பனைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என சோ கூறியுள்ளார். வீரப்பன் போல் ஒரு பொம்மை செய்து அதை சோ ஆசை தீரசுட்டுக்கொன்றும், கத்தியால் குத்தியும் கொல்லட்டும்.

காஷ்மீரில் வீரப்பனை விட பயங்கரமான தீவிரவாதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்போது, வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில்தவறேதுமில்லை. அவன் மனிதனாக வாழ வழி செய்ய வேண்டும் என்றார் ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+