ஆட்டோ போகஸ் கண்காட்சி முடிந்தது
கோவை:
கோவையில் ஆட்டோபோகஸ் 2000 கண்காட்சி நிறைவு பெற்றது. இந்தக் கண்காட்சியின் மூலம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக விசாரணைகள்வந்தது.
கோவையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஆட்டோபோகஸ் 2000 என்ற கண்காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சிக்கு இந்தியஆட்டோமொபைல் சங்கம் மற்றும் அகில இந்திய மோட்டார் வாகன சங்கம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
இதில், வானங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள், புதிய வாகனங்கள் அறிமுகம் போன்றவை நடந்தது. இந்தக் கண்காட்சி நிறைவு விழா ஆகஸ்ட்6ம் தேதி நடந்தது.
விழாவில், மாநில மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும்போது, கோவையில் தொழில்முனைவோர், கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
விழா முடிவில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் புருஷோத்தமன் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையில் நடந்த ஆட்டோபோகஸ் கண்காட்சி நிறைவு பெறுகிறது. இந்தக் கண்காட்சியை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம், 50 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை விசாரணை கிடைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இக்கண்காட்சியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
இக் கண்காட்சியில் டி.வி.எஸ்.,சுசூகி மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் சிறப்பான முறையில் கண்காட்சி அமைத்திருந்தன. ஒளி, ஒலி, கலை நிகழ்ச்சிகளை இந்தநிறுவனங்கள் அமைத்து பொதுமக்களைக் கவர்ந்தன.












Click it and Unblock the Notifications