For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக நீதிமன்றங்களில் 3,46,000 வழக்குகள் தேக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தில் 3 லட்சத்து 46 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன. வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை மாற்றிஅமைக்க வேண்டும் என கோவையில் மாநில சட்ட அமைச்சர் ஆலடி அருணா தெரிவித்தார்.

கோவையில் ரூ. 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் புதிய கட்டடத் திறப்பு விழா நடந்தது. முதல்வர் கருணாநிதி கடந்தஆகஸ்ட் 2-ம் தேதி திறந்து வைப்பதாக இருந்த இக்கட்டடம், வருவாய்த் துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மறைவையொட்டி திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

இக்கட்டடத் திறப்பு விழா ஆகஸ்ட் 6ம் தேதி மாலை நடந்தது. தமிழக சட்டத் துறை அமைச்சர் ஆலடி அருணா தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதி(பொறுப்பு) என்.கே ஜெயின் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

கோவை மேயர் கோபாலகிருஷ்ணன், மாநில விளையாட்டுத் துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, போலீஸ்கமிஷனர் ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம், மாவட்ட நீதிபதி சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாநில சட்ட அமைச்சர் ஆலடி அருணா பேசியதாவது:

சரஸ்வதி என்ற பெயர் வைத்திருப்பதால், கல்வியில் யாரும் சிறந்து விளங்கப் போவதில்லை. லட்சுமி என்ற பெயர் கொண்டிருந்தால், செல்வச் செழிப்போடுவாழ்ந்து விடப் போவதில்லை. இதே போல் உயர்ந்த நீதிமன்றக் கட்டடம் கட்டி விட்டதால் உயர்நீதிமன்றத்திற்குரிய அதிகாரத்தை கேட்கக் கூடாது.

இந்தக் கோரிக்கையை ஏற்கனவே முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது, உயர்நீதி மன்றம் அனுமதித்தால் இங்கு ஒரு "சர்க்யூட் பெஞ்ச்அமைக்கலாம் என முதல்வர் கூறியுள்ளார். எனவே, இங்கு சர்க்யூட் பெஞ்ச் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம்அனுமதிக்க வேண்டும்.

உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 லட்சத்து 46 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன. இதனைவிரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா முழுவதிலும் தேங்கியுள்ள வழக்குகளில் இது 10சதவீதமாகும். உச்சநீதிமன்றத்தில் மட்டுமே குறைந்த அளவாக 20 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு வழக்குகள் கூட நிலுவையில் இல்லாமல் விசாரிக்கப்படுகின்றன. கோடை விடுறை விடப்பட்டிருந்தாலும்அங்கு நீதிபதிகள் செயல்பட்டு வழக்குகளைத் தேங்க விடாமல் விசாரித்து முடிக்கின்றனர். அவர்களால் முடிவது நம்மால் ஏன் முடியாது?.

இதற்கு அடிப்படைக் காரணங்கள் இருந்தால், அதனை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நமது நீதிமன்ற அடிப்படைச்செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றம் விடுக்கும் அனைத்து நிதி உதவிகளையும் முதல்வர் உடனடியாக வழங்கி வருகிறார்என்று ஆலடி அருணா பேசினார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) என்.கே ஜெயின் பேசியதாவது:

உயர்நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 700 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்பொறுப்பு நீதிமன்றத்திற்கு உண்டு. கடந்த ஒரு மாதத்தில் 20 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் 10 ஆயிரம் வழக்குகளை மட்டுமே விசாரிக்க முடிந்தது. எனவே, தேவையான பணியாட்களை அரசு நியமனம் செய்ய வேண்டும். தற்போதுள்ளநீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் இரவு பகலாகப் பாடுபட்டு வருகின்றனர் என்று ஜெயின்பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X