Rasi Palan Today | இன்றைய ராசிபலன்

சென்னை: இன்றைய தினம் கன்னி ராசியிலும் பிற்பகலுக்கு மேல் துலாம் ராசியிலும் சந்திரன் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் சூரியன் மற்றும் புதன், விருச்சிகத்தில், குரு தனுசு ராசியில் சனி, சுக்கிரன் சஞ்சாரம் உள்ளது. கடகத்தில் ராகு, மகரத்தில் கேது மேஷத்தில் செவ்வாய், என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் இன்று உள்ளது. கும்பம் ராசிக்காரர்களுக்கும் மீனம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் அமைதி காக்கவும் ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

மேஷம்
இன்றைய தினம் சந்திரன் உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். நோய்கள் எட்டிப்பார்கும் உடல் நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் சந்திரன் மாற்றம் குருவின் ஆசியால் மன அமைதி ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணவருவாய் அதிகரிக்கும் சிந்தித்து முதலீடு செய்யுங்கள். குடும்பம், காதல் வாழ்க்கை இன்றைக்கு சுமாராக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உங்கள் காதல் துணையுடன் சிறு பயணம் செல்வீர்கள் ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 6.

ரிஷபம்
சந்திரன் சஞ்சாரம் ராசிக்கு ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால் பிள்ளைகள் வழியில் தொல்லைகள் ஏற்படும் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வைக்கவும். வேலை செய்யும் இடத்தில் இன்றைக்கு ஒத்துழைப்பு கிடைக்காது அலுவலக பாலிடிக்ஸ் அலைக்கழிக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். காதல், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 9.

மிதுனம்
சந்திரன் சஞ்சாரம் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் மாறுவதால் உற்சாகம் அதிகமாக இருக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டாவிட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகள் வந்து தொல்லையை ஏற்படுத்தும். உங்களின் குடும்பத்தினரிடம் அக்கறையாக பேசுங்கள். காதல், குடும்ப வாழ்க்கை இன்றைக்கு சீராக இருக்கும். உற்சாகமான நாளாக உங்களுக்கு உள்ளது. உங்களின் உடல்நலம் சுமாராக இருக்கும் பண வருமானம் சுமார்தான் ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 7.

கடகம்
ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீடு வாகன பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். படு சூப்பரான நாள் இது என்பதால் உடல் நலம் உற்சாகமாக இருக்கும். உங்களின் குடும்பத்தில் உற்சாகமும், குதூகலமும் அதிகரிக்கும். காதல், மண வாழ்க்கை இன்றைக்கு அதிகம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் உயரதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 7.

சிம்மம்
ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் பணவரவு அதிகமாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் ஆசி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் காதல், மண வாழ்க்கை இன்றைக்கு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த ஊடல்கள் நீங்கும். அன்பு பரிசால் உங்களை திணறடிப்பார்கள். அலுவலக ரீதியான பயணம் வெற்றியை தரும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 8.

கன்னி
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மன அமைதி இழந்து காணப்படுவீர்கள். பிற்பகலுக்கு மேல் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். உடல் நலத்தில் சிறு உபாதைகள் வரும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உங்களின் துணையிடம் உண்மையாக காதலை வெளிப்படுத்துவீர்கள். ரகசியங்களை அனைவரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். செய்யும் வேலைகளில் கவனம் தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 6.

துலாம்
சந்திரன் சஞ்சாரத்தினால் இன்றைக்கு வரவை விட செலவு அதிகமாகவே இருக்கும். மனதில் சிறு கலக்கம் ஏற்படும் வயிறு கோளாறுகள் ஏற்படும் என்பதால் சாப்பாடு விசயத்தில் கவனம் தேவை. எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடவும். உங்களின் காதல் வாழ்க்கை சுமார்தான். வீண் பேச்சு பேசி உறவை வெட்டி விட வேண்டாம் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு எதிர்பேச்சு பேச வேண்டாம். பணவரவு இன்றைக்கு சுமாராக இருக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 1.

விருச்சிகம்
ராசிக்கு பதினொன்றாம் வீடான லாப சந்திரன் சஞ்சாரம் உள்ளது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு உங்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தும். பிற்பகலுக்கு மேல் சுப செலவுகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கை இன்றைக்கு உற்சாகத்தினை ஏற்படுத்தும். வாழ்க்கை துணையிடம் கொஞ்சி பேசுங்கள் சின்னச் சின்ன முத்தங்கள் கொடுத்து முந்தைய ரணங்களை மறக்கடிக்கச் செய்யுங்கள். ராசியான நிறம் இளம் சிவப்பு , ராசியான எண் 5.

தனுசு
ராசிக்கு பத்தாம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உங்களின் உடல் நலம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை சீராக இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் செல்லும் பயணத்தின் மூலம் செலவுகள் வரும். காதல் உறவு உற்சாகத்தை தரும். குடும்ப வாழ்க்கை பிரச்சினைகள் எதுவும் இன்றி சீராக செல்லும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5.

மகரம்
ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். அப்பாவின் உடல் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அப்பாவின் மூலம் வருமானம் வரும் வெளியூர், வெளிநாடு பயணம் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். காதல் விவகாரங்கள் கைகொடுக்கும். ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும் நாள். ராசியான எண் 9, ராசியான நிறம் சிவப்பு.

கும்பம்
ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திரன் உள்ளதால் குடும்பத்தில் பிரச்சினை தலைதூக்கும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் சுமாராகவே இருக்கும். பிற்பகலுக்கு மேல் உங்களின் மனதில் அமைதி ஏற்படும். லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சாரத்தினால் பொருளாதாரம் சூப்பராக இருக்கும். மன அமைதிக்காக ஆலய தரிசனம் செய்யவும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 7.

மீனம்
சந்திரன் ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் களத்திர ஸ்தானம் வலுவாக உள்ளது. கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் சந்திரன் எட்டாம் வீட்டிற்கு மாறுவதால் சந்திராஷ்டமம் தொடங்குகிறது. குருவின் கருணையினால் இன்றைக்கு நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். முக்கிய விசயங்களை இன்றைக்கு பேசுவதை தவிர்க்கவும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை இன்றைக்கு பேச வேண்டாம். உங்களின் காதல், திருமண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும், உடல் நலம் சீராக இருக்கும். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 8.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!