கும்ப ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
கும்ப ராசி அன்பர்களே! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடிவரும். குடும்பத்தில் மங்கல முயற்சிகள் வெற்றி பெறும். தர்ம காரியங்கள் நடக்கும். மகான்களின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அலைந்து திரிய வேண்டிய வேலையில் நல்ல லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக பல காரியங்களை சாதிப்பீர்கள். தனதானிய லாபம் கிட்டும்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும்.
சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்புகள் சேரும்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும்.
இன்று உங்கள் பலம்:
அரசாங்க காரியங்களுக்கு நல்ல நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் வெற்றிக்காக திட்டம் தீட்டுவது.
இன்று உங்கள் பலவீனம்:
ஏதாவது ஒரு சிந்தனை ஏற்பட்டு உங்கள் மனதில் அழுத்தத்தை கொண்டு வருவது. கட்டுப்படுத்தினாலும் செலவுகள் கை மீறி போவது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பிள்ளைகளுக்கு செல்லம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.
2 வாகனம் ஓட்டும்போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் சேரக்கூடாது.
3 இணைய மோசடிகளில் விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 8,3
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
| தேதி | 2 - ஆடி - பராபவ வருடம் சனி |
| நாள் | சனி |
| திதி | பஞ்சமி (up to July 19, 3:43 am) சஷ்டி (up to July 20, 3:30 am) |
| நட்சத்திரம் | பூரம் (up to 6:00 pm) உத்திரம் (up to July 19,6:11 pm) |
| யோகம் | சித்த-மரண யோகம் |
| நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 9:30 - 10:30 pm |
| இராகு காலம் | காலை 9.00 - 10.30 |
| எமகண்டம் | மதியம் 1.30 - 3.00 |
| குளிகை | காலை 6.00 - 7.30 |
| சூலம் | கிழக்கு |
| பரிகாரம் | தயிர் |
| சந்திராஷ்டமம் | திருவோணம், அவிட்டம் |
| சூரியோதயம் | 5:54 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:35 PM |
| சந்திரோதயம் | Jul 18 9:28 AM |
| சந்திர அஸ்தமனம் | Jul 18 9:54 PM |