Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: கும்ப ராசி (Aquarius)

கும்ப ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Kumbham rasipalan): கும்ப ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கும்பம்ராசி பலன்

சனி பகவானின் கனிவான கருணையும் செவ்வாய், ராகு, குரு ஆதிக்கம் உடைய கும்ப ராசி அன்பர்களே!

பிறந்திருக்கும் ஆங்கில புத்தாண்டு சிறந்த பலன்களை சீராகத் தருகின்ற வகையில் அமையும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஆபரண சேர்க்கையும் அதிகரிக்கும். எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற நிலையில் வெற்றிகரமான ஆதாயம் கிடைக்கும். தொழில்துறையில் முன்னேற்றம் உண்டாகி கையில் தாராளமாக பணம் புழங்கும். திட்டம் போட்டு செயல்படுத்த நினைத்த புதிய தொழில் இப்பொழுது சாத்தியப்படும். வாழ்க்கை பாதையில் ஒரு ஒளி பிரகாசிக்கும். இந்த ஆங்கில புத்தாண்டு யோகமாக அமையும்.

கிரக சஞ்சார பலன்கள்

சனிபகவான் சஞ்சாரம் :

இடம் மாறாமல் இந்த ஆண்டில் அருள்பாலிக்கும் சனி பகவானின் கருணையால் வாகன வசதிகள் உண்டாகும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடந்தேறும். தொழில் துறையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். வருமானம் அதிகரித்து வங்கி இருப்பு உயரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறுகின்ற வாய்ப்பு கிடைக்கும்.

ராகு கேது சஞ்சாரம் :

ராசியிலேயே நிற்கிறார் ராகு. கேது ஏழாம் இடத்தில் இருக்கிறார். குடும்பங்களில் சில குழப்பங்கள் வரலாம். தம்பதியருக்கு மத்தியிலே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். இருப்பினும் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நவம்பர் 13 ஆம் தேதி ராகு, கேது இடம் மாறி நிற்கிறார்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வரும். மனைவி வகையில் ஆதாயம் கிடைக்கும்.

குரு பகவான் சஞ்சாரம் :

ரோக ஸ்தானத்தில் நிற்கும் குருவின் அருளால் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வருமானத்தில் குறைவிருக்காது. தொழிலுக்கு இருந்த எதிர்ப்பு நிலைகள் மாறும். குழந்தை பாக்கியத்திற்காக பரிகாரம் செய்து ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும். அக்டோபர் 20 ஆம் தேதி சிம்மத்துக்கு செல்கிறார்.  இதுவரை இருந்த சிரமங்கள், சிக்கல்கள் அனைத்தும் விலகி நிம்மதி பெரும் மூச்சு விடுவீர்கள். வீடு வாங்கும் யோகத்தை குரு ஏற்படுத்துவார். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலுக்கு உதவியாக அமைகின்ற நல்ல நண்பர்களை ஏற்படுத்திக் கொடுப்பார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்க குரு பகவான் அனுக்கிரகம் செய்வார்.

சூரியன் சஞ்சாரம் :

சூரியனின் பயணப் பாதையில் இந்தக் கட்டங்களில் நிற்கின்ற பொழுது வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பார்.

மார்ச் 15 ஏப்ரல் 13
ஜூலை 17 ஆகஸ்ட் 17
செப்டம்பர் 18 அக்டோபர் 17

இந்த நாட்களில் இரண்டு மடங்கு லாபத்தை கொடுப்பார். மனதில் அழுத்தத்தை கொடுத்த வழக்குகளை உங்களுக்கு சாதகமாக மாற்றுவார். தொழிலில் மேன்மையை தருவார். உத்தியோகத்தில் ஒரு நிலையான இடத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். அரசியல்வாதிகளின் செல்வாக்குக்கு அடித்தளம் அமைப்பார். அரசு ஊழியர்கள் தன லாபம் அடைவார்கள். எதிர்பார்த்த அரசாங்க உதவிகள் வெற்றிகரமாக கிடைக்கும்.

பொதுப் பலன்கள்

2026 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும். பொருளாதார நிலையில் பொதுப்பொழிவு ஏற்படும்.

குடும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பரிமாற்றம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கையால் பெண்களின் சந்தோஷம் மேலோங்கும்.

திருமணம்:  உரிய காலத்தில் மகளுக்கு திருமணம் நடக்கவில்லையே என்ற பெற்றோர்களின் ஏக்கம் முடிவுக்கு வரும்

அரசியல்: அரசியல்வாதிகளின் உயர்வுக்கான அடித்தளம் அமைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைத்துறை:  சின்னத்திரை கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமைந்து வருமானம் பெருகும்.

வியாபாரம்: கமிஷன் வியாபாரத்தில் கை நிறைய லாபம் கிடைக்கும். வாகனப் பிராப்த்தி உண்டாகும்.

நட்சத்திர பலன்கள் :

அவிட்டம் 2,3 பாதம்:


அற்புதமான யோகத்தை அள்ளித்தரும் ஆண்டாக இந்த இது அமையும். கழுத்தை நெருக்கிய கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் முயற்சிகள் வெற்றியாக மாறும்.

தொழில்:  ஊழியர்கள் பிரச்சனையால் பாதிப்படைந்த தொழில் உங்களின் முயற்சியால் வளர்ச்சியடையும். ரியல் எஸ்டேட் பிரச்சனை தீர்வுக்கு வரும். பங்கு பரிவர்த்தனையில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். எலக்ட்ரானிக் தொழில் ஆதாயத்தை தரும்.

பணியாளர்கள்:  அரசு ஊழியர்களுக்கு அற்புதமான காலம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

பெண்கள்:  குழந்தைப் பாக்கியம் இல்லாமல் மனம் குமுறிய பெண்களுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு வசந்த காலம் திரும்பும்.

ஆரோக்கியம்:  நீர்க்கட்டி பிரச்சனையால் வேதனைப்பட்ட பெண்களுக்கு ஒரு விடிவு உண்டாகும். உடல்நிலை சீராகும்.

சதயம்: 


அடுத்தடுத்து அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும். நினைத்த காரியத்தை நடத்த நண்பர்கள் உதவியாக நிற்பார்கள். வாக்குத்திறமையால் செல்வாக்கு உயரும்.

தொழில்:  சனி பகவானின் அனுக்கிரகத்தால் இரும்புத் தொழிலில் ஏற்றம் உண்டாகும். சிறிய வியாபாரிகள் பெரிய லாபத்தை பெறுவார்கள். வாகன தொழிலும் வசப்படும். எலக்ட்ரானிக், அழகு சாதனங்கள், பைனான்ஸ் தொழிலில் ஏற்றம் கிடைக்கும். திரையுலகினர் புகழும் பணமும் பெறுவார்கள்.

பணியாளர்:  அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டு. வேலை இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உண்டு.

கல்வி:  ஆசிரியர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். மேற்படிப்புக்கான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்: கண் புரை நோய் பாதிப்பு இந்த காலகட்டத்தில் சீராகும். குறை தீர்ந்த மகிழ்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்:


தொழில் தொடங்க ஆசைப்பட்டீர்கள் அல்லவா? அதை இப்பொழுது நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் முயற்சி வெற்றியாகி அதிக நன்மைகள் கிடைக்கும். அடுத்தடுத்து லாபம் அதிகரிக்கும்.

தொழில்:  சின்னத்திரையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உள்ளூர், வெளியூர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் சூடு பிடித்து நடக்கும். தகவல் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றம் உண்டாகும்.

பணியாளர்கள்: அரசு ஊழியர்களுக்கு பதவி மாற்றம் ஏற்படும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.

பெண்கள்:  திருமண வயதினருக்கு ஏற்ற வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தக் குறை நீங்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

ஆரோக்கியம்: தொந்தரவு தந்த நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். எறும்பை போல் சுறுசுறுப்பாக இயங்கும் நிலைக்கு உடல்நிலை சீராகும்.

தேதி 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am)
நட்சத்திரம் அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் அசுவினி, பரணி
சூரியோதயம் 6:23 AM
சூரிய அஸ்தமனம் 6:15 PM
சந்திரோதயம் Mar 11 12:08 AM
சந்திர அஸ்தமனம் Mar 11 11:34 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+