விருச்சிக ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Viruchigam rasipalan): விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மங்கலனின் மாட்சியையும் குரு, சனி, புதன் ஆகியோரின் ஆளுமையையும் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!
2026 ஆம் ஆண்டு விருப்பமான காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கின்ற ஆண்டாக அமையும். கழுத்தை நெரித்த பிரச்சனைகள் அனைத்தும் கழன்று விழும். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். எதிர்பார்த்த... எதிர்பாராத லாபங்களும் ஏற்படும். அடிமை வேலையை உதறிவிட்டு சுயமாக தொழில் பண்ணுகின்ற வாய்ப்பு இந்த ஆண்டில் உங்களுக்கு ஏற்படும். புதிய தடத்தில் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்ற நிலை உருவாகும். வீட்டு மனை வாங்கும் யோகம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கையும் உண்டாகும். மொத்தத்தில் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக இது உங்களுக்கு அமையும்.
கிரக சஞ்சார பலன்கள்
சனி பகவான் சஞ்சாரம்:
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். இழுபறியாக இருந்த சொத்து வழக்கை சமூகமாக முடித்து வைப்பார். தொழில் துறையில் சில உயர்வான பலன்களை கொடுப்பார். நின்று போன காரியங்களை நீங்கள் நினைத்த மாதிரி முடித்து வைப்பார். கையில் பணம் தங்குகின்ற அளவுக்கு வருமானம் அதிகரிக்கும்.
ராகு கேது சஞ்சாரம்:
ராகு நாலாம் இடத்தில் நிற்கிறார். கேது பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சில நேரங்களில் குடும்பத்தில் மன நிம்மதி குறையும். உடல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படும். அதே நேரத்தில் தொழிலுக்கு தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்க பெறும். நவம்பர் 13 ஆம் தேதி ராகு மகரத்திற்கு வருகிறார். கேது கடகத்திற்கு செல்கிறார். இந்த அமைப்பு தைரியமாக தொழிலில் தடம் பதிக்க உதவும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை கொடுக்கும்.
குரு பகவான் சஞ்சாரம்:
குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பார். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து மிக முக்கியமான செய்தி வந்து சேரும். அக்டோபர் 20ஆம் தேதி சிம்மத்திற்கு செல்கிறார். இந்த அமைப்பும் மிகப்பெரிய லாபத்தையும் பொருளாதார வளர்ச்சியையும் கொடுக்கும். திருமணம் நடக்கவில்லையே என்று கலக்கத்தோடு இருப்பவர்களுக்கு கல்யாண பிராப்த்தி உண்டாகும். சிலர் புதிய வீடு கட்டி குடியேறுவார்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்கு முடிவுக்கு வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிவட்டார செல்வாக்கை உயர்த்துவார்.
சூரியன் சஞ்சாரம்: 12 ராசிகளில் பயணப்படும் சூரியன், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்.
மே 15 ஜூன் 14
ஆகஸ்ட் 18 செப்டம்பர் 17
நவம்பர் 17 டிசம்பர் 15
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். தீர்க்காத கடன்களை தீர்ப்பீர்கள். உங்களுக்கு எதிரான வழக்குகளில் சாதகமான தீர்ப்பை சூரியன் வாங்கித் தருவார். தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்பார். லாபத்தை அதிகப்படுத்தி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார், அரசு ஊழியர்களின் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள் மக்களின் பாராட்டை பெறுவார்கள், அரசாங்க வகையில் உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். வெளிநாடு, வெளி மாநிலம் செல்லக்கூடிய முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும்.
புது பலன்கள்:
2026 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்கும். பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம் உண்டாகும்.
குடும்பம்: சண்டை சச்சரவுகளால் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். புதிய ஆடைகள் வாங்கும் யோகம் ஏற்படும்.
திருமணம்: தோஷம் என்று கூறி மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இளம் பெண்ணுக்கு திருமணம் நடந்தேறும்.
அரசியல்: அரசியல்வாதிகள் கவனத்துடன் களமாட வேண்டும். மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.
கலைத்துறை: சின்னத்திரை கலைஞர்களுக்கு பொற்காலம். புதிய வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
வியாபாரம்: வெளிநாட்டில் வியாபார ஒப்பந்தம் ஏற்படும். புதிய கார் வாங்குவீர்கள்.
நட்சத்திர பலன்கள்:
விசாகம் 1 ஆம் பாதம் :
விற்பனையில் லாபம் கொழிக்கும் ஆண்டாக இது அமையும். நெருக்கடிகள் நீங்கும். தேவைகள் தடையில்லாமல் நடக்கும். ஆதாயம் அதிகரிக்கும்.
தொழில்: தொழிலில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தனலாபம் அதிகரிக்கும். நடக்குமா என்று கவலைப்பட்ட காரியம் ஆச்சரியப்படும் வகையில் நடந்தேறும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கட்டுமான பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் சிறப்பான லாபத்தை பெறுவார்கள்.
பணியாளர்கள்: இல்லத்தரசிகள் முன்னேற்றமான பலனை காணும் வருடம். சிலருக்கு மறுமண பாக்கியம் அமையும். மழலை செல்வம் உண்டாகும்.
ஆரோக்கியம்: நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இருந்தாலும் நவீன மருத்துவம் ஆரோக்கியத்தை சீராக்கும்.
அனுஷம்:
அதிர்ஷ்டக் காற்று உங்கள் மேல் வீசுகின்ற நேரம். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நினைத்த காரியத்தை உடனுக்குடன் முடிப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
தொழில்: மின் சாதனம், அழகு சாதனங்கள், கொடுக்கல் வாங்கல், இடம் வாங்கி விற்கும் தொழில் என்று எந்த வகையாக இருந்தாலும் அதில் முயற்சிக்குத் தகுந்த பலன் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகி பணவரவும் அதிகரிக்கும்.
பணியாளர்கள்: அரசுத் துறை, தனியார் துறை ஊழியர்கள் மதிப்பு மரியாதையும் அடைவார்கள். எதிர்பார்த்த பலனை இந்த ஆண்டு கொண்டுவரும். பதவி உயர்வும் கிடைக்கும். இடமாற்றமும் ஏற்படும்.
கல்வி: முறையாக கல்லூரிக்கு செல்வதை பழக்கப்படுத்த வேண்டும். உயர்கல்விக்குரிய இடம் கிடைக்கும்.
ஆரோக்கியம்: மன உளைச்சலால் தலைவலி அதிகரிக்கும். முறையான தூக்கமும் மருத்துவரின் ஆலோசனையும் பெற்று தீர்வு காணுங்கள்.
கேட்டை:
கேட்டதெல்லாம் கிடைக்கின்ற பொற்காலமாக இந்த ஆண்டு அமையும். கடன் தொல்லை நீங்கும். வரவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுடைய வேலைத்திறன் லாபத்தை கொண்டு வரும். தொழிலில் மிகச்சிறந்த வருமானத்தை பெறுகின்ற நிலை ஏற்படும்.
தொழில்: தொழில்துறையில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வெளிநாட்டு வர்த்தக வாய்ப்பு கை கொடுக்கும். தொழிலில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். கணினி, சினிமா, சின்னத்திரை, பங்கு பரிவர்த்தனை போன்றவற்றில் மேன்மையான பலன் கிடைக்கும்.
பணியாளர்கள்: உங்களின் வேலைத் திறன் பணியிடத்தில் பாராட்டப்படும். மதிப்பு உயரும், செல்வாக்கு அதிகரிக்கும். சிறந்த பலன் கை மேல் கிடைக்கும்.
பெண்கள்: பொறுப்புடன் நடப்பதால் வேலை இடத்தில் பெண்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.
ஆரோக்கியம்: சிலருக்கு சளித் தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கும். குளிர்பானத்தை தவிர்க்க வேண்டும். தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும்.
| தேதி | 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am) |
| நட்சத்திரம் | அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | அசுவினி, பரணி |
| சூரியோதயம் | 6:23 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:15 PM |
| சந்திரோதயம் | Mar 11 12:08 AM |
| சந்திர அஸ்தமனம் | Mar 11 11:34 AM |