2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசி (Taurus)

ரிஷப ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Rishabam rasipalan): ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்ராசி பலன்

சுக்கிரனின் சுபிட்சமும் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆதிக்கமும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
2026 ஆம் ஆண்டு எதிர்பார்த்த நன்மைகளை தருகின்ற வருடமாக அமையும். நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும். நெருக்கடிகள் அனைத்தும் நீங்கி சந்தோஷம் அடைவீர்கள். சொந்தமாக தொழில் செய்பவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். இதுவரை இருந்த நிலை மாறி புதிய வெளிச்சம் வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் ஒளி வீசும். சொத்து சுகம் குறைவில்லாமல் சேரும். ஏற்கனவே சீட்டு போட்டு வைத்திருந்த பணத்தை கொண்டு நகை வாங்கி மகிழ்வீர்கள்.

சனி பகவான் சஞ்சாரம்:

சனி பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த வருடம் முழுமையாக அதில் நிலை கொண்டிருக்கிறார். தொழிலில் கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். வியாபாரத்தை புது முறையில் நடத்தி வெற்றி காண்பீர்கள். சனி கொடுத்தால் யார் தடுப்பார் இந்த நிலையில் நினைத்ததை முடிப்பீர்கள்.

ராகு கேது சஞ்சாரம்:

ராகு பத்தாம் இடத்திலும் கேது நான்காம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். கேது பகவான் குடும்பத்தில் பல நல்ல காரியங்களை நடத்தி வைப்பார். மன நிம்மதி கிடைக்கும். ராகு வியாபாரம் பெருக பெரிய உதவியாக இருப்பார். நவம்பர் 13 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஏற்படுகிறது. ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் இடமாறுகிறார்கள். இதுவும் சிறப்பான பலன்களை தரும் அமைப்பு. நினைத்த காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்.

குரு பகவான் சஞ்சாரம்:

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வரை குரு பகவான் கடக ராசியில் இருக்கிறார். இது விஜயவீரிய ஸ்தானமாகும். எதிரிகள் பயந்து ஓடுவார்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். அக்டோபர் 20 ஆம் தேதி சிம்மத்திற்கு செல்கிறார். இது சுகஸ்தானம், தொழில் ஸ்தானம். நண்பர்கள் உதவியோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். குருவின் உச்சத்தால் வீட்டிலும் வெளியிலும் அந்தஸ்தும் செல்வாக்கும் அதிகரிக்கும். புதிய வீடு வாங்கி மனைவி மக்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். வில்லங்கம் இல்லாமல் பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளும் தடையில்லாமல் குடும்பத்தில் நடக்கும்.

சூரியன் சஞ்சாரம்:

ஜனவரி 11பிப்ரவரி 12 

மே 15  ஜூன் 14 

செப்டம்பர் 18  அக்டோபர் 17

சூரியனின் அனுக்கிரகமான நிலை உங்களுக்கு யோகமான பலன்களை கொண்டு வரும். உத்தியோகத்தில் உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும். அரசியல்வாதிகளின் நிலை உயர்வுக்கு வரும். அரசாங்க உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும்.

பொதுப் பலன்கள்:

2026 ஆம் ஆண்டு இன்பம் தரும் வருஷமாக மலர்கிறது. வாழ்க்கை தரம் உயரும். பொருளாதார நிலையில் மறுமலர்ச்சி ஏற்படும்.

குடும்பம்: குடும்பத்தில் சந்தோஷமும் சுபிட்சமும் அதிகரிக்கும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் புரிந்துணர்வோடு செயல்படுவார்கள். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

திருமணம்: சில காரியங்களால் திருமணத்தடை ஏற்பட்டிருக்கும். ஆனால் அவை இந்த காலகட்டத்தில் நீங்கும்

அரசியல்: அரசியல்வாதிகள் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு பதவியை பாதுகாத்துக் கொள்வார்கள்.

கலைத்துறை: கலைஞர்களுக்கு உத்வேகம் கிடைக்கும். தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் வெற்றி காண்பார்கள்.

நட்சத்திர பலன்கள்:

கார்த்திகை 1,2,3 ஆம் பாதம்:


முருகன் திருவருளால் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கழுத்தை இறுக்கிய நெருக்கடிகள் நீங்கும். சில முயற்சிகளில் தடையை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.
வாகனங்களை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வருவீர்கள்.

தொழில்: சிறிய அளவில் செய்கின்ற வியாபாரத்தில் கூட அதிக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி தொழில் கைகொடுக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், ரியல் எஸ்டேட், கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடக்கும்.

பணியாளர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பலனையும் ஊழியர்கள் அடைவார்கள்.

பெண்கள்: குடும்பப் பெண்களுக்கு குதூகலமான வருடம் இது. ஆசைப்பட்ட ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

ஆரோக்கியம்: உடல் நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இறைவன் அருளால் சிரமங்கள் விலகும். இருப்பினும் மருத்துவரை நாடி ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

ரோகிணி: 


எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். யோகமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டுக்கு செல்கின்ற வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில்: சனிபகவானின் அருளால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் ஏற்றம் உண்டாகும். சிறிய கடை வைத்திருப்பவர்கள் கூட அதிக லாபம் பெறுவார்கள். வண்டி வாகனங்கள் வாங்கி விற்கலாம். கொடுக்கல் வாங்கலில் இறங்கலாம். நில விற்பனை கை கொடுக்கும். திரைத் துறையும் சிறப்பாக அமையும்.

பணியாளர்கள்: மேலதிகாரிகளால் சில இடையூறுகளை சந்திக்க வேண்டி வரும். இருப்பினும் வேலைக்கு பாதிப்பு இருக்காது.

பெண்கள்: இல்லறத்தை வழிநடத்துகின்ற பெண்களுக்கு ஏற்றமான காலம். இளம் பெண்களுக்கு திருப்பூட்டு வைபவம் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஆரோக்கியம்: ஆரோக்கிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இருப்பினும் சிறிய விஷயமாக இருந்தாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2 பாதம்: 


நினைத்த காரியத்தை நிறைவேற்ற பிடிவாதமாக இருப்பீர்கள். வியாபார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவி கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.

தொழில்: கூட்டு முயற்சியில் தொழிலை மேம்படுத்தும் பணியில் இறங்குவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புகுத்துவீர்கள். பல்துறை வர்த்தகம் நல்ல பலனை கொண்டு வரும். பங்குச் சந்தையில் கவனமாக இருக்கவும்.

பணியாளர்கள்: கூட இருப்பவர்களே உங்களுக்கு எதிராக சில காரியங்கள் செய்யலாம். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி மாற்றம் உண்டாகும்.

பெண்கள்: குடும்பத்தில் அமைதி நிலவும். தங்கள் பொறுப்பை உணர்ந்து பெண்கள் நடந்து கொள்வார்கள். செலவுகளை சிக்கனப்படுத்தி கணவனுக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்வார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிக நன்மை உண்டு.

ஆரோக்கியம்: வெளியூர் பயணங்களால் வயிற்று பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. சாப்பாடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ச்சியான பானங்களை அருந்த வேண்டாம்.

தேதி 18 - வைகாசி - பராபவ வருடம் திங்கள்
நாள் திங்கள்
திதி பிரதமை (up to 4:37 pm) துவிதியை (up to June 02, 7:01 pm)
நட்சத்திரம் கேட்டை (up to 7:08 pm) மூலம் (up to June 02,10:06 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 6:30 - 7:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 9:15 - 10:15 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் காலை 7.30 - 9.00
எமகண்டம் காலை 10.30 - 12.00
குளிகை மதியம் 1.30 - 3.00
சூலம் கிழக்கு
பரிகாரம் தயிர்
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை
சூரியோதயம் 5:45 AM
சூரிய அஸ்தமனம் 6:28 PM
சந்திரோதயம் Jun 01 7:31 PM
சந்திர அஸ்தமனம் Jun 02 6:58 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+