மீன ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Meenam rasipalan): மீன ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குரு பகவானின் திருவருளும் குரு, சனி, புதன் ஆதிக்கமும் பெற்ற மீன ராசி அன்பர்களே!
பிறந்திருக்கும் 2026 ஆம் ஆண்டு சிறந்த பலன்களை கொண்டு வரும் வருடமாக அமையும். தொழிலுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். நீங்கள் எதிர்கொண்ட சிக்கலும் சிரமங்களும் தீர்ந்து போகும். எடுத்துக்கொண்ட காரியங்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சொத்து சுகம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் கனவான சொந்த தொழில் தொடங்கும் ஆசை நிறைவேறும். அற்புதமான பலன்களை தருகின்ற ஆண்டாக இது இருக்கும்.
கிரக சஞ்சார பலன்கள்
சனிபகவான் சஞ்சாரம்:
சனிபகவான் ராசியில் அமர்ந்து சகல யோகங்களையும் அளிக்கின்ற நிலையில் இருக்கிறார். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். எந்த காரியத்தையும் துணிச்சலோடு நிறைவேற்ற முடியும். சிக்கலுக்கு உள்ளாகி சிரமத்தில் இருந்த செயல்கள் வெற்றிகரமாக நடந்தேறும். குறைவில்லாத வருமானம் கிடைக்கும்.
ராகு கேது சஞ்சாரம் :
12 ஆம் இடத்தில் ராகு இருக்கிறார். 6 ஆம் இடத்தில் கேது நிற்கிறார். இது ஒரு அற்புதமான அமைப்பாகும். உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள். உங்களை பார்த்து பொறாமைப்பட்ட மனிதர்களை புதிய முயற்சிகளால் திணற வைப்பீர்கள். நவம்பர் 13 ஆம் தேதி ராகு மகரத்திற்கு செல்கிறார். கேது கடகத்திற்கு மாறுகிறார். இந்த நிலையும் உங்களுக்கு சாதகமான பலன்களைத்தான் தரும். பொருளாதாரம் அதிகரிக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வங்கி இருப்பு உயரும்.
குரு பகவான் சஞ்சாரம் :
உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்கிறார். ஆன்மீக காரியங்களில் அதிகம் நாட்டம் ஏற்படும். கோவில் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளிப்பீர்கள். வறுமையில் தடுமாறிய குடும்பத்திற்கு பண உதவி செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். புதிய வீடு மாறுகின்ற வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். புதிதாக வீடு கட்டி குடியேறும் யோகமும் உண்டு. தகப்பனார் வகையில் பிரச்சனையில் இருந்த சொத்து குறித்த வழக்கு உங்களுக்கு சாதகமான நிலையை குரு பகவான் ஏற்படுத்துவார். அக்டோபர் 20ஆம் தேதி சிம்மத்திற்கு குரு செல்கிறார். இந்த காலகட்டமும் உங்களுக்கு யோகமான பலன்கள் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். சொல்வாக்கு மற்றவர்களை ஈர்க்கும். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகள் மறையும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் நிலை உருவாகும்.
சூரியன் சஞ்சாரம் :
மாதம் ஒரு கட்டம் பயணப்படும் சூரிய பகவான் சஞ்சாரம் சாதகமான பலன்களை தருகின்ற காலமாக இது அமையும்.
மார்ச் 15 ஏப்ரல் 13
ஜூன் 15 ஜூலை 16
டிசம்பர் 15 ஜனவரி 14
இந்த காலகட்டத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். உங்களின் எதிரிகளை இடம் தெரியாமல் செய்து விடுவார். உங்களின் வாக்கு வன்மையால் உறவினர்கள் மத்தியில் இருந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றலை கொடுப்பார். அரசு ஊழியர்கள் சிறப்பான லாபம் அடைவார்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கை உயரம் வைப்பார். எந்த முயற்சியாக இருந்தாலும் இடையூறு இல்லாமல் வெற்றி கிடைக்கும்படி செய்வார். உத்தியோகத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவார். வெளிநாட்டு யோகமும் கைகூடி வரும்.
பொதுப் பலன்கள்
2026 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரம் உயரும். பொருளாதார வரவு அதிகரிக்கும்.
குடும்பம்: வீட்டுப் பிரச்சினையால் மனம் விரும்பிய நிலையில் இருந்த உங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை உண்டாகும்.
திருமணம்: ஏக்கத்தோடு இருக்கும் இளம் பெண்களுக்கு திருமணம் வாய்ப்பு ஏற்பட்டு சந்தோச சங்கீதம் பாடலாம்.
அரசியல்: அலுப்பில்லாமல் வேலை செய்து மக்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் நிலை அரசியல்வாதிகளுக்கு ஏற்படும்.
கலைத்துறை: வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்து கலைத்துறையினர் கணிசமான லாபமும் சிறப்பான பாராட்டும் பெறுவார்கள்.
வியாபாரம்: சாமர்த்தியமான நடவடிக்கையால் வியாபாரத்தை விரிவு படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள்.
நட்சத்திர பலன்கள் :
பூரட்டாதி 4 ஆம் பாதம்:
அதிரடியான காரியங்கள் செய்து அபிரிமிதமான லாபங்கள் கிடைக்கின்ற ஆண்டாக இது இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். அலைச்சல்கள் ஆதாயமாக மாறும்.
தொழில்: லாப ஸ்தான அதிபதி ராசியிலேயே நிற்பதால் சிரமப்படுத்திய கடன்கள் அடையும். அத்தியாவசிய செலவுகள் ஏற்பட்டாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். எலக்ட்ரானிக், மெடிக்கல், கெமிக்கல், ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை ஆகியவை சிறப்படையும்.
பணியாளர்கள்: வேலைத்திறனால் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட கால ஆசை நிறைவேறி இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வும் உண்டு.
பெண்கள்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கையிருப்பு அதிகரிக்கும். நினைத்த பொருளை வாங்கும் ஆசை நிறைவேறும். உறவின் இடத்தில் மதிப்பு கூடும்.
ஆரோக்கியம்: தோள்பட்டை வலியால் அவதிப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தின் மூலம் நல்ல பலன் கிடைக்கும.
உத்திரட்டாதி:
உங்களின் செயல் திறனால் சமூக அந்தஸ்தில் உயர்வு உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வாசல் கதவை தட்டி நிற்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொழில்: லாப ஸ்தானாதிபதியின் வலுவான பயணத்தில் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். சிறிய முயற்சியிலும் அதிக அனுகூலம் உண்டு. வாகனம் வாங்கி விற்கும் தொழில் சிறப்பாக நடக்கும். பைனான்ஸ் தொழிலில் கை நிறைய காசு புரளும். ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றம் பெறும்.
பணியாளர்கள்: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயரும். தனியார் துறை ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் வருமானம் கிடைக்கும். பதவி உயர்வு, இடம் மாற்றங்களை அடையும் வாய்ப்பு உண்டு.
கல்வி: மாணவர்கள் ஊர் சுற்றும் பழக்கத்தை நிறுத்தி தேர்ச்சி அடையும் வகையில் படிப்பை தொடர வேண்டும். வெளிநாடு சென்று படிக்கும் யோகமும் உண்டு.
ஆரோக்கியம்: தூக்கமின்மையால் உடல் சோர்வு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்தால் உடல்நிலை சீராகும்.
ரேவதி:
வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பும் உண்டு. எடுத்த முயற்சிகள் வெற்றியடையும்.
தொழில்: பங்கு பரிவர்த்தனை தொழிலை பக்குவமாக செய்ய வேண்டும். கணினித் துறையில் கணிசமான லாபம் உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில் தொய்வில்லாமல் நடக்கும். தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பணியாளர்கள்: சுறுசுறுப்பாக வேலை பார்ப்பதால் உங்கள் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனடைவார்கள்.
பெண்கள்: பொறுப்போடு வேலை பார்த்து செல்வாக்கை உயர்த்துவீர்கள். சிலருக்கு திருமண வாய்ப்பு உண்டாகும். குழந்தைப் பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியில் மனம் திழைக்கும்.
ஆரோக்கியம்: வியாபாரம் நிமித்தமாக செல்லும் வெளியூர் பயணங்களில் வயிற்றுப் பிரச்சனை உண்டாகலாம். உரிய மருந்துகளை எடுத்தால் சரியாகிவிடும்.
| தேதி | 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am) |
| நட்சத்திரம் | அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | அசுவினி, பரணி |
| சூரியோதயம் | 6:23 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:15 PM |
| சந்திரோதயம் | Mar 11 12:08 AM |
| சந்திர அஸ்தமனம் | Mar 11 11:34 AM |