Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மகர ராசி (Capricorn)

மகர ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Makaram rasipalan): மகர ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மகரம்ராசி பலன்

சனிபகவானின் கருணையும் சூரியன் சந்திரன், செவ்வாய் ஆதிக்கமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!

2026 ஆம் ஆண்டு மகர ராசிக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதாக அமையும். எத்தனை துன்பங்கள் வந்தாலும் அத்தனையிலும் மீண்டு வருவீர்கள். சிரமங்கள் சிக்கல்கள் நீங்கி சந்தோஷ நந்தவனத்தில் நடப்பீர்கள். நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்துன வெற்றி கிடைக்கும். புதிய தொழிலில் இறங்குகின்ற சிந்தனை நடைமுறைக்கு வரும். சுயதொழிலில் மேன்மை உண்டாகும். வாழ்க்கையின் வசந்த காலமாக இந்த வருடம் அமையும். சிலருக்கு பொன்னும் பொருளும் சேரும்.

கிரக சஞ்சார பலன்கள்

சனி பகவான் சஞ்சாரம்;

இந்த ஆண்டு முழுவதும் இடம் மாறாமல் மூன்றாம் இடத்தில் முகாமிட்டு இருக்கிறார் சனி பகவான். இது விஜய வீரிய ஸ்தானம் என்பதால் எந்த காரியத்திலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மிகச்சிறந்த உயர்வை அடைவீர்கள். எண்ணியது நிறைவேறி சந்தோஷம் அதிகரிக்கும். இடைப்பட்ட காலத்தில் தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். வருமானம் அதிகரிக்கும்.

ராகு கேது சஞ்சாரம் :

ராகு இரண்டாம் இடமான கும்பத்திலும் கேது எட்டாம் இடமான சிம்மத்திலும் அமர்ந்திருக்கின்றார்கள். இது குடும்பத்திற்கு சில சிக்கல்களை கொண்டு வரலாம். பக்குவமாக நடந்து சிரமங்களை கடந்து வர வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருக்காது. நவம்பர் 18ஆம் தேதி சர்ப்ப கிரகங்கள் இடம் மாறுகின்றன. ராசியிலும் ஏழாம் இடத்திலும் அமர்கிறார்கள். கடுமையான முயற்சிகளுக்கு பின்பே காரியங்கள் வெற்றி அடையும். இருப்பினும் பொருளாதார நிலையில் தொய்வு ஏற்படாது.

குரு பகவான் சஞ்சாரம் :

குரு பகவான் ராசிக்கு ஏழில் நிற்கிறார் களத்திர ஸ்தானம்ன் என்று சொல்லக்கூடிய இடத்தில் நிற்பதால் அவசியமான சுப காரியங்களுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். கொடுத்த இடத்தில் பணம் வர தாமதமாகும். அக்டோபர் 20ஆம் தேதி சிம்மத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். மங்கல காரியங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். மனை இடம் வாங்க வேண்டிய ஆசை இந்த காலகட்டத்தில் நிறைவேறும். சிலருக்கு வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்தில் உரிய பங்கு உங்களுக்கு வந்து சேரும். பொது இடங்களில் உங்களுடைய வாக்குக்கு மரியாதை அதிகரிக்கும். வேலை இடங்களில் மதிப்பும் செல்வாக்கும் கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

சூரியன் சஞ்சாரம் :

பின் வரும் மாதங்களில் சூரிய பகவானின் பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டு வரும்.

ஜனவரி 15 பிப்ரவரி 12
ஏப்ரல் 14 மே 14
மே 15 ஜூன் 14

இந்த நேரத்தில் எதிர்பார்த்த வெற்றியை சூரிய பகவான் உங்களுக்கு கொடுப்பார். வியாபாரத்தில் சிறந்த லாபத்தை ஏற்படுத்தித் தருவார். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் நிலையை உயர்த்துவார். அரசாங்க உதவிகள் தடையில்லாமல் பெற வழி வகுப்பார். தொழில்காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய யோகத்தை கொடுப்பார்.

பொதுப் பலன்கள் :

2026 ஆம் ஆண்டில் உங்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். பொருளாதாரத் துறையில் மிகச்சிறந்த உயர்வு ஏற்படும்.

குடும்பம்:  குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். கடந்த கால பிரச்சனைகள் மறையும். தம்பதியினரின் புரிந்துணர்வு மேலோங்கி நிற்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சொத்து சுகம் கைகூடிவரும்.

திருமணம்:  இழுபிரியாக இருந்த திருமண வாய்ப்புகள் உறவினர்கள் ஒத்துழைப்பால் இனிதே நடந்தேறும்.

அரசியல்: அரசியல்வாதிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் பதவியை தக்க வைத்துக் கொள்வார்கள்.

கலைத்துறை:  கலைத்துறையினர் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.

வியாபாரம்:  உள்ளூர் வியாபாரம் வெளிநாடு வரை வியாபிக்கும் யோகம் உண்டு. புதிய சொத்துக்கள் சேரும்.

நட்சத்திர பலன்கள் :

உத்திராடம் 2,3,4 ஆம் பாதம் :


உங்களுக்கு நற்பலன்களை தரும் ஆண்டாக அமையும். இடர்பாடுகள் நீங்கி இன்பம் பெருகும். எந்த முயற்சியிலும் ஆதாயம் அதிகரிக்கும்.

தொழில்:  பங்கு பரிவர்த்தனை தொழிலில் பாதகம் ஏற்படாது. இயந்திரம் சம்பந்தப்பட்ட விற்பனை அதிகரிக்கும். மின்சார பொருட்கள், மருத்துவத்துறை, இடம் வாங்கி விற்கும் தொழில் போன்றவை சிறப்படையும்.

பணியாளர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் உற்சாகமான வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் உண்டு.

பெண்கள்:  குடும்பப் பெண்களுக்கு குதூகலம் தரும் ஆண்டு. மரியாதை அதிகரிக்கும். இழந்த வாழ்க்கை திரும்ப கிடைக்கும்.

ஆரோக்கியம்:  சங்கடப்படுத்திய சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

திருவோணம்: யோகமான பலன்கள் வாசல் கதவை தட்டும். எதிர்பார்த்த வேலைகள் இடையூறு இல்லாமல் நடக்கும். வெளியிடங்களில் செல்வாக்கு உயரும்.

தொழில்: வாகனம் வாங்கி விற்கும் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். துணி வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். திரையுலகினருக்கு இந்த வருடம் பொற்காலமாக அமையும். அழகு சாதன வியாபாரம் அபரிமிதமாக நடக்கும்.

பணியாளர்கள்:  ஊதிய உயர்வை எதிர்பார்த்த அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வும் ஏற்படலாம்.

கல்வி:  ஆசிரியர்கள் ஒத்துழைப்பு மாணவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். விரும்பிய மேற்படிப்புக்கு இடம் கிடைக்கும்.

ஆரோக்கியம்: பாத எரிச்சல் பாதிப்பால் அவதிப்பட்ட உங்களுக்கு நவீன மருத்துவத்தால் நல்ல தீர்வு உண்டாகும்.

அவிட்டம் 1,2 ஆம் பாதம்:


சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நன்மையான காரியங்கள் தடையில்லாமல் நடக்கும்.

தொழில்:  வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில் சூடு பிடிக்கும். கணினித் துறையில் கணிசமான லாபம் கிடைக்கும். சினிமா, சின்னத்திரை வருமானத்தை கொண்டு வரும். பங்குச்சந்தை கை கொடுக்கும்.

பணியாளர்கள்:  தாமதமான பதவி உயர்வு சாதகமாக முடியும். அரசு ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படலாம்.

பெண்கள்:  திருமண வயது வந்தவர்களுக்கு வரன் கை கூடி வரும். மழலைச் செல்வத்துக்கு ஏங்கியவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

ஆரோக்கியம்: சிறுநீரக கல் பிரச்சனையில் அவதிப்பட்டவர்களுக்கு சிகிச்சை மூலம் தீர்வு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

தேதி 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am)
நட்சத்திரம் அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் அசுவினி, பரணி
சூரியோதயம் 6:23 AM
சூரிய அஸ்தமனம் 6:15 PM
சந்திரோதயம் Mar 11 12:08 AM
சந்திர அஸ்தமனம் Mar 11 11:34 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+