Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: சிம்ம ராசி (Leo)

சிம்ம ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Simmam rasipalan): சிம்ம ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்ராசி பலன்

சூரியனின் அருள் கடாட்சமும் கேது, சுக்கிரன், சூரியன் ஆதிக்கமும் உடைய சிம்ம ராசி அன்பர்களே!

2026 ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு சீரும் சிறப்பையும் ஏற்படுத்த போகிறது. தொழில் முயற்சிகளில் உங்கள் ஆசை நிறைவேறும். ஆதாயம் பெருகி மனதிற்கு நிம்மதியை தரும். நெருக்கடியான காலம் விலகி சந்தோஷம் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் மேன்மை கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் உண்டாகும். சொத்து சுகம் சேர்க்கை ஏற்படும். விலை அதிகமானாலும் தகுதிக்கு ஏற்றார் போல் தங்க நகை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.

சனி பகவான் சஞ்சாரம்:

சனிபகவான் எட்டாம் இடத்தில் நிற்பதாலும் சூரியனுக்கு எதிரானவர் என்பதாலும் வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையாக பயணிக்க வேண்டும். நினைத்த காரியங்களில் இடையூறு ஏற்பட்டாலும் முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். வருமானம் உழைப்புக்கு தகுந்த மாதிரி கிடைக்கும்.

ராகு கேது சஞ்சாரம்:

ராகு ஏழாம் இடத்திலும் கேது ராசியிலும் நிற்கிறார்கள். களத்திரங்களுக்கிடையே அதாவது கணவன் மனைவிக்கிடையே ஒரு கடுமையான போராட்டங்கள் நடக்கின்ற காலமாக அமையலாம். இருப்பினும் குரு பகவானின் அனுக்கிரகத்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது சுயமாகவே விலகிவிடும். நவம்பர் 13 ஆம் தேதி ராகு மகரத்திற்கும் கேது கடகத்திற்கும் இடமாறுகிறார்கள். இது ஒரு யோகமான பலனை தருகின்ற கிரக பெயர்ச்சி. சர்ப்பங்களுக்கு 6 ஆம் இடமும் 12-ஆம் இடமும் மிகச் சிறந்த பலன்களை கொண்டு வரும்.

குரு பகவான் சஞ்சாரம்:  அயன சயன நிற்கும் குரு பகவான் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்கப் போகிறார். எடுத்த காரியத்தில் தடையில்லாமல் வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகளை இருந்த இடம் தெரியாமல் செய்வீர்கள். அக்டோபர் 20 இல் குரு பகவான் ராசிக்கு வருகிறார். குருச் சண்டாள யோகத்தில் அமர்கிறார். மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டு வரும் நேரம் இது. மழலை செல்வம் தவழும். புதிய வீடு மாறுதல் நடக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். ராகு கேதுவால் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் பெருக்கெடுக்கும்.

சூரியன் சஞ்சாரம்: இந்தக் காலகட்டத்தில் சூரியனின் பயணங்கள் உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும். ஆசைகளை பூர்த்தி செய்யும்.

ஜனவரி 15 பிப்ரவரி 12
மார்ச் 15 ஏப்ரல் 13
நவம்பர் 17 டிசம்பர் 15

இந்த காலங்களில் வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை நன்மையாக முடியும். வியாபாரத்தில் லாபம் முன்னேற்றகரமாக இருக்கும். அரசியல்வாதிகளின் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வெளிநாட்டு யோகம் உண்டாகும்.

பொதுப் பலன்கள்:

2026 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான யோகத்தை கொண்டு வரும். பொருளாதார நிலையில் அதிரடி மாற்றம் வரும்.

குடும்பம்: குடும்பத்தில் குழப்பங்கள் வந்தாலும் பெரியோர்களின் ஆசியால் பிரச்சனைகள் தீரும். தம்பதியர் மனம் ஒத்து நடக்க முற்படுவார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.

திருமணம்: தள்ளிப்போன திருமணங்கள் இந்த ஆண்டில் சொல்லி வைத்த மாதிரி நடக்கும்.

அரசியல்; அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும். சோம்பேறித்தனம் கூடாது.

கலைத்துறை: கலைத்துறையினர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். வெளிநாட்டு வாய்ப்புகளை பெறுவார்கள்.

வியாபாரம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

நட்சத்திர பலன்கள்:

மகம்:


மகத்தான நன்மைகள் தருகின்ற ஆண்டாக இது அமையும். சிரமங்கள் நீங்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும்.

தொழில்: லாபஸ்தானம் சிறப்பாக இருப்பதால் தொழிலில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் உண்டாகும். இயங்காத தொழிற்சாலையை இயங்க வைப்பீர்கள். துணி வியாபாரம், பல் பொருள் அங்காடி, பங்கு பரிவர்த்தனை அனைத்திலும் மேன்மை உண்டாகும்.

பணியாளர்கள்: உங்கள் திறமையால் வேலை இடத்தில் பெருமை அடைவீர்கள். எதிர்பார்த்த இடம் மாறுதல் இந்த ஆண்டு கிடைக்கும்.

பெண்கள்: இல்லத்தரசிகள் நினைத்ததை வாங்கி மகிழும் நிலை உண்டாகும். தங்களுடைய பொறுப்பான நடவடிக்கையால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

ஆரோக்கியம் : சில பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் சிக்கல் இருக்காது.

பூரம்:


எதிர்பார்த்த நண்பர் தகுந்த நேரத்தில் உதவி செய்வார். தடைபட்டு போன வேலைகள் சிறப்பாக நடக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில்: வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். கையில் பணம் புரளும். வங்கி இருப்பு அதிகரிக்கும். அனைத்து துறையில் இருப்பவர்களுக்கும் இது அற்புதமான காலம். குரு பகவானின் அனுக்கிரகம் சிறப்பான பலனை கொண்டு வரும்.

பணியாளர்கள்: அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள். தனியார் துறை ஊழியர்களின் மதிப்பு அதிகரிக்கும். கையில் கணிசமாக காசு புரளும்.

கல்வி: மாணவர்கள் பொறுப்புடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கியம்: கால் வலி பிரச்சனை சிரமத்தை கொடுக்கும். உரிய மருத்துவம் நல்ல பலனைத் தரும்.

உத்திரம் 1 ஆம் பாதம்:


ஆஹா... என்று அதிசயத்தக்க வகையில் அற்புதமான பலன்கள் நடக்கும். எடுத்த முயற்சிகளில் தோல்வி ஏற்படாது. பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வங்கி இருப்பு உயர்வதால் மன நிம்மதி உண்டாகும்.

தொழில்:புதிய தொழிலை நம்பிக்கையோடு தொடங்கலாம். வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடுவீர்கள். துணிமணி ஏற்றுமதியில் நல்ல லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்: கொடுத்த வேலையை சிறப்புடன் முடிக்கும் உங்கள் திறனை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். பதவி மாற்றத்திற்கு சிபாரிசு செய்வார்கள்.

பெண்கள்: பணிக்கு செல்லும் பெண்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நிலை உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாரிசு பிரச்சனை தீரும்.

ஆரோக்கியம்: உடல் நிலையில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. இரவு நேரங்களில் அதிக நேரம் கண்விழிக்க வேண்டாம்.

தேதி 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am)
நட்சத்திரம் அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் அசுவினி, பரணி
சூரியோதயம் 6:23 AM
சூரிய அஸ்தமனம் 6:15 PM
சந்திரோதயம் Mar 11 12:08 AM
சந்திர அஸ்தமனம் Mar 11 11:34 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+