சிம்மம் மாதாந்திர ராசிபலன் - Leo Monthly Horoscope in Tamil

சிம்மம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Simmam rasipalan): சிம்மம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களே...

சிம்ம ராசிக்காரர்களுக்கு பல சிறப்பான பலன்களை மாத முற்பகுதியிலேயே பார்க்கலாம். உறவினர்களின் அனுசரிப்பும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியைத் தரும். பெரியோர்களின் நட்பால் சில நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வு அவசியம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் வீட்டில் அமைதி இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையை கொண்டு வருவது உங்கள் கையில் தான் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் வீட்டில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

"கையில வாங்கினேன். பையில போடல. காசு போன இடம் தெரியல" என்ற பாடலுக்கு இணங்க வரவுக்கு தகுந்த செலவு இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கான சில ஏற்பாடுகளை செய்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு சரியான காலத்தில் உதவி செய்வார்கள். மனைவி பிள்ளைகளின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அரசாங்க உதவியை நாடுவீர்கள். வெளிநாட்டில் படிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வீர்கள். கோயில் திருப்பணிகளுக்கான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

அலுவலகம் உங்களுக்கு சுகமான சுமைகளை தருகின்ற வகையில் அமையும். கடினமான வேலைகளை கூட மனமகிழ்ச்சியோடு முடித்துக் கொடுப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம். அதிகாரிகளும் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். அரசு பணியில் இருப்பவர்கள் முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும்.

தொழிலில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகளை சாமர்த்தியமாக தீர்ப்பீர்கள். போட்டியாளர்களை புற முதுகு காட்டி ஓட வைப்பீர்கள். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வத்தோடு உழைப்பீர்கள். வங்கி வரவு செலவு கணக்குகளில் தவறு நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தை கண்ணாகக் கருதும் பெண்களுக்கு இது  சிறப்பான மாதமாக அமையும். விரும்பிய நகை, ஆடை போன்றவற்றை வாங்குகின்ற யோகம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். புதிய சலுகைகளும் ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 20 21 23 26 27 29 அக்டோபர் 2 3 4 5 7 9 10 15 17


அதிர்ஷ்ட எண்கள்: 1,7,6,3

சந்திராஷ்டம நாள்கள்: செப்டம்பர் 26 பிற்பகல் முதல் 27 28 29 காலை வரை.

பரிகாரம்: யோக நரசிம்மர் வழிபாடும், 'ஓம் ஸ்ரீ யோக நரசிம்மா போற்றி,
ஓம் ஸ்ரீ வீர நரசிம்மா போற்றி' பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

 

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+