ரிஷபம் மாதாந்திர ராசிபலன் - Taurus Monthly Horoscope in Tamil

ரிஷபம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Rishabam rasipalan): ரிஷபம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களே...

நினைத்த காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கின்ற மாதமாக இது அமையும். உறவினர்கள் உங்களின் வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப்படுகின்ற அளவிற்கு கணவன் மனைவியிடையே அன்பும் அனுசரணையும் இருக்கும். இருப்பினும் மற்றவர்கள் பேச்சை கேட்பது சிக்கலை கொண்டு வரலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் உற்சாகமாக கலந்து கொள்வீர்கள். வீட்டில் நிம்மதி நிலவும்.

செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி வரவுகளும் அமையும். தங்க நகைகள் வாங்கலாம் என்ற திட்டத்தை சற்று தள்ளிப் போடுவீர்கள். ஏனென்றால் வீட்டு தேவைகளுக்காக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். வேலை நிமித்தமாக சிலர் வெளிநாடு செல்ல வேண்டிய தேவை உருவாகும். பிள்ளைகளின் மேல்படிப்பிற்காக சில ஏற்பாடுகளை செய்வீர்கள். மருத்துவத்துறையில் மாணவர்கள் சாதனை படைக்கின்ற நிலை உண்டாகும். பெரிய மனிதரின் சிபாரிசு பக்க துணையாக இருக்கும்.

அலுவலகத்தில் உடனுக்குடன் வேலைகளை முடித்து மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வேலை பளு அதிகமாகிறது என்று கவலைப்பட மாட்டீர்கள். இருப்பினும் சில நேரங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். மாத பிற்பகுதியில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சில அங்கீகாரம் கிடைக்கும்.

வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். சில சிக்கல்கள் தொழிலுக்கு இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு வருவீர்கள். வங்கி வரவு செலவு கணக்குகளை மிகச் சரியாக கையாளுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகித்து வரும் பெண்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்களைத் தரும். புதிய ஆபரணங்கள் வாங்கும் ஆசை தள்ளிப் போகும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 18 19 20 26 27 29 அக்டோபர் 1 2 4 5 7 8 11 12 13 15

அதிர்ஷ்ட எண்கள்: 6,1,2,9

சந்திராஷ்டம நாள்கள்: செப்டம்பர் 20 அதிகாலை முதல் 21 22 காலை வரை அதிகாலை வரை.

பரிகாரம்: விநாயகர் வழிபாடும், 'விநாயகர் அகவல்'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+