கடகம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Kadagam rasipalan): கடகம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம் அன்பர்களே....
மாத ஆரம்பத்தில் சில மங்கலகரமான செய்திகள் வந்து சேரும். பிரிந்து போன உறவுகளை ஒன்று சேர்ப்பீர்கள். எந்த காரியத்தையும் பொறுமையுடன் செயல்படுத்த வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கி நிற்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து வீட்டில் சந்தோஷ நிலையை கொண்டு வருவீர்கள். சுப நிகழ்ச்சிகளும் நடப்பதால் குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டில் நடைபெறும் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் சிறப்புடன் இருக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும்.
நீண்ட நாள் வராமல் இருந்த பழைய பாக்கி வசூல் ஆகும். வங்கியில் இருந்தும் எதிர்பார்த்த கடன் சாங்ஷன் ஆகும். ஆபரணங்கள் வாங்கும் ஆசை நிறைவேறும். குடும்பத்தினருக்கு ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். மின்சார மின்னணு சாதனங்கள் வாங்கி வீட்டிற்கு புதிய அழகை கொண்டு வருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மனைவி பிள்ளைகள் உங்களின் கருத்துக்கு தகுந்தவாறு நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு பயணம் ஏற்படுகின்ற சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வீர்கள். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த அக்கறையாக இருப்பார்கள்.
அலுவலகத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படலாம். வேலையில் கவனச் சிதறல் இருக்கக் கூடாது. சிலர் விரும்பிய இடத்திற்கு மாறுதல் பெறலாம். அதிகாரிகள் ஓரளவு ஒத்துழைப்பு தருவார்கள். அரசு பணியில் இருப்பவர்கள் மாத நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் மிகுந்த கவனத்துடன் வேலை பார்ப்பது நல்லது.
வியாபாரம் சுமாராக நடக்கும். தொழில் துறையில் புதிய நிகழ்ச்சிகளை புகுத்துவீர்கள். கூட இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக களைவீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்தலாம்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சில அதிரடியான மாற்றங்கள் ஏற்படும். ஊதிய உயர்வு, சலுகைகள் கிடைக்கலாம். குடும்பத்தை கட்டிக் காக்கும் பெண்களுக்கு கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்ளும் பாங்கு பல நன்மைகளை கொண்டு வரும். ஆடை அணிமணி சேர்க்கைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 18 19 21 22 25 26 28 29 அக்டோபர் 2 3 6 7 9 10 13 14 17
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,8,5
சந்திராஷ்டம நாள்கள்: செப்டம்பர் 24 காலை முதல் 25 26 பிற்பகல் வரை.
பரிகாரம்: சிவபெருமான் வழிபாடும், 'நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க,
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |