கடக ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
கடக ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். மகான்களின் ஆசி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு பக்க துணையாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழிலில் முழு கவனமும் செலுத்தப்படுவதால் எதிர்பாராத லாபம் கிட்டும். தன தானிய லாபங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளால் நன்மை உண்டாகும். வேலை இடத்தில் பதவி உயர்வு தேடி வரும்.
புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலையில் சிக்கல் உண்டு.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அலைச்சலில் அவதி.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு குறைவு.
இன்று உங்கள் பலம்:
உங்களின் திறமைக்கு ஏற்ப வேலையில் உயர்வு, சம்பள அதிகரிப்பு. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மன தைரியம் கொடுக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
உடன் இருப்பவர்களை அளவுக்கு அதிகமாக நம்புவது. செலவு செய்வதில் கவனக்குறைவாக இருப்பது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பண விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
2 வார்த்தைகளை எந்த இடத்திலும் அளவாக பேச வேண்டும்.
3 வேலை இடத்தில் நுட்பமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.
வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |