தனுசு ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
தனுசு ராசி அன்பர்களே! இனிப்பான செய்திகள் வந்து சேரும் நாள். தெய்வ தரிசனம் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நன்மைகள் உண்டாகும். அளவுக்கு மீறிய உழைப்பு வருமானத்தை அதிகரிக்கும். விவசாயத்தின் மூலமாக வருமானம் வரும். தன தானிய லாபங்கள் கிட்டும். உறவினர் விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் நிலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகி கையிருப்பை உயர்த்தும். வியாபாரம் மிக நல்ல முறையில் நடக்கும்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு காரியசித்தி உண்டாகும்.
பூராட நட்சத்திரக்காரர்கள் தொழில் மேன்மை அடையும்.
உத்திரம் நட்சத்திரக்காரர்கள் எண்ணியது நிறைவேறும்.
இன்று உங்கள் பலம்:
மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
சட்டென கோபப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசுவது. சிறு பிரச்சினையாக இருந்தாலும் பெரிதாக எண்ணி கவலைப்படுவது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
2 ஆடம்பரமாக செலவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும்.
3 கால் போன போக்கில் செல்லக்கூடாது.
அதிர்ஷ்ட எண்: 3,6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம்
வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |