தனுசு மாதாந்திர ராசிபலன் - Sagittarius Monthly Horoscope in Tamil

தனுசு ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Dhanusu rasipalan): தனுசு ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனுசுராசி பலன்

தனுசு ராசி அன்பர்களே...

அமர்க்களமான பலன்களை அள்ளித் தருகின்ற மாதமாக புரட்டாசி மாதம் உங்களுக்கு அமைகிறது. சுப நிகழ்ச்சிகளின் காரணமாக செலவுகள் அதிகரிக்கலாம். உறவினர்களின் வருகையும் வீட்டில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம். இருப்பினும் கணவன் மனைவிக்கு இடையே பிணக்குகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஒருவர் கருத்தை ஒருவர் கேட்டு நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் என்பதை மறந்து விடக்கூடாது. சுப நிகழ்ச்சிகளின் காரணமாக வெளியூர் பயணங்கள் அமையும்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி வந்து சேரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் வேலைக்காக சில முன்னேற்பாடுகள் செய்வீர்கள். படிப்புச் செலவிற்காக வங்கிக் கடனை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான முக்கிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவதற்காக சில ஏற்பாடுகளையும் செய்வீர்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். புண்ணியத் தலங்களுக்கு சென்று வருகின்ற வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் சற்று மனச்சோர்வு ஏற்படலாம். இருந்தாலும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். மாத நடுப் பகுதியிலும் பிற்பகுதியிலும் அரசு ஊழியர்களுக்கு சவாலாக அமைகின்ற காலமாக இருக்கும். ஆகவே, எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட லாபத்தைக் கொடுக்கும். வியாபாரத்தை கெடுக்க நினைக்கும் போட்டியாளர்கள் தோற்றுப் போவார்கள். தொழிலுக்கு புதிய முதலீடு செய்வீர்கள். அதே நேரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வெற்றிகரமான மாதமாக இது இருக்கிறது. பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வையும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தை கட்டிக் காக்கும் பெண்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். வீட்டை மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பார்கள்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  செப்டம்பர் 18 19 21 22 24 25 27 29 30 அக்டோபர் 2 4 6 7 10 12 16 17 

அதிர்ஷ்ட எண்கள்: 3,7,6,1

சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 5 அதிகாலை முதல் 6 7 இரவு வரை.

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்தி  வழிபாடும், 'ஓம் அறிவுக் குருவே போற்றி,
ஓம் அழிவிலானே போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+