மீனம் மாதாந்திர ராசிபலன் - Pisces Monthly Horoscope in Tamil

மீனம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Meenam rasipalan): மீனம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மீனம்ராசி பலன்

மீன ராசி அன்பர்களே....

புரட்டாசி மாத தொடக்கத்தில் சில பதட்டமான காரியங்களை சந்தித்தாலும் அடுத்தடுத்த நாட்களில் அவை தானாகவே சரியாகிவிடும். குடும்பத்தில் பொறுமை மிக முக்கியம். கணவன் மனைவிக்கிடையே திகழும் உறவு பிள்ளைகளின் சந்தோஷத்தை அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறும். பிரிந்து போன உறவுகளை ஒன்று சேர்ப்பதில் முனைப்புக் காட்டுவீர்கள். பள்ளிக் கால தோழரின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.

ஏதாவது ஒரு வகையில் பணவரவு இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் சொந்த நாடு திரும்புகின்ற வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மிகவும் ஒத்தாசையாக திகழ்வார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களின் விருப்பத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். சிலர் வேலை காரணமாக வெளிமாநிலங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பழைய நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குடும்பத்துடன் அவர்கள் இல்லத்திற்கு சென்று வருவீர்கள். பிள்ளைகள் படிப்பில் மிகவும் அக்கறையாக இருப்பார்கள்.

பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் சலிப்பில்லாமல் வேலை பார்ப்பீர்கள். அதிகாரிகளும் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். அரசு ஊழியர்களுக்கு மாத பிற்பகுதியில் சில சவால்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆகவே எச்சரிக்கையாக பணி செய்வது முக்கியம். சிலருக்கு இடம் மாற்றமும் ஏற்படலாம். பதவி உயர்வும் கிடைக்கலாம்.

தொழிலில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வதில் முனைப்புக் காட்டுவீர்கள். மறைமுக பிரச்சனைகளை தவிடு பொடியாக்குவீர்கள். கணக்கு வழக்குகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

குடும்பத்தை கட்டிக் காக்கும் பெண்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக பங்குனி இருக்கும். ஆபரணம் வாங்கும் ஆசைகள் நிறைவேறும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். சலுகைகளும் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  செப்டம்பர் 18 19 21 22 24 25 27 30 அக்டோபர் 2 5 6 7 9 10 12 13 14 17

அதிர்ஷ்ட எண்கள்: 3,8,5,7

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 11 இரவு முதல் 12 13 14 அதிகாலை வரை.

பரிகாரம்: மீனாட்சியம்மன் வழிபாடும், 'ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ,
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி' 
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..
தொலைபேசி எண்.9942987859

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+