கன்னி மாதாந்திர ராசிபலன் - Virgo Monthly Horoscope in Tamil

கன்னி ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Kanni rasipalan): கன்னி ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னிராசி பலன்

கன்னி அன்பர்களே...

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகளை தந்து சமுதாயத்தில் அந்தஸ்தை உயர்த்துகின்ற மாதமாக அமையும். குடும்பத்தில் அமைதி இல்லை என்றால் தொழிலை கவனிக்க முடியாது. ஆகவே கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் வீட்டில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலை உருவாகும். உறவினர்கள் மாறுபட்ட கோணத்தில் நடந்தாலும் அவர்களை ஒன்று படுத்துவதில் அக்கறையாக செயல்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

ஏதோ ஒரு வகையில் பண வரவு இருந்து கொண்டே இருக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் ஆசையை இந்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். வீட்டை புதுப்பித்து புதிய மின்சார சாதனங்களை பொருத்துவீர்கள். நீண்ட நாள் தேவையான வாஷிங் மெஷின் போன்ற மின்சாதன பொருட்களையும் வாங்குவீர்கள். வேலை நிமித்தமாக சிலருக்கு வெளிநாடு போகின்ற வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளின் வேலைக்காகவும் படிப்புக்காகவும் அரசாங்க பதவியில் இருப்பவர்களின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

அலுவலகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். கூட இருப்பவர்களே இடையூறு செய்யலாம். சிலருக்கு இடம் மாற்றமும் ஏற்படக்கூடும். அதிகாரிகள் எதிர்மறையாக நடந்து கொள்ளலாம். அரசுப்பணியில் இருப்பவர்கள் மாத பிற்பகுதியில் கவனக் குறைவாக வேலை செய்யக்கூடாது.

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இருப்பினும் தொய்வு ஏற்படாது. உழைப்புக்குத் தகுந்த வருமானம் கிடைக்கும். மறைமுகப் போட்டிகள் மறைந்து போகும். பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

இல்லறத்தை நல்லறமாக மாற்றும் பெண்களுக்கு இன்பம் தரும் மாதமாக பங்குனி பரிமளிக்கும். உயர்ந்த ஆடைகள் வாங்குவீர்கள். விரும்பிய தங்க நகைகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 18 19 22 23 24 25 28 அக்டோபர் 5 6 7 10 12 13 14 15 17

அதிர்ஷ்ட எண்கள்: 5,1,6,3

சந்திராஷ்டம நாள்கள்: செப்டம்பர் 29 காலை முதல் 30 அக்டோபர் 1 காலை வரை.

பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடும்,
'ஓம் அன்பு லக்ஷ்மியே போற்றி,
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி' பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+