விருச்சிகம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Viruchigam rasipalan): விருச்சிகம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
விருச்சிக ராசி அன்பர்களே...
புரட்டாசி மாதம் உங்களுக்கு புதிய உற்சாகம் தரும் மாதமாக அமையப் போகிறது. குடும்பத்திலிருந்து வந்த கசப்புகள் மறைந்து போகும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனதை பகிர்ந்து கொள்வீர்கள். மேலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ள தலைப்படுவீர்கள். இருப்பினும் மகிழ்ச்சியான சூழ்நிலையே குடும்பத்தில் காணப்படுகிறது. உறவினர்களின் வருகையும் ஒத்துழைப்பும் நல்ல காரியங்களுக்கு பயனுள்ளதாகவும் அமையும். வீட்டில் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகி மன நிம்மதி ஏற்படும்.
அரசாங்க வகையிலிருந்து நீங்கள் எதிர்பார்த்த கடனுதவி தாமதம் இன்றி வந்து சேரும். ஏற்கனவே கட்டி இருந்த நகைச்சீட்டின் மூலம் மனைவிக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். எதிர்வரும் காலங்களில் வெயிலின் தாக்கத்தை உணர்ந்து வீட்டில் குளிர்சாதனத்தை பொருத்துவீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீண்ட காலமாக நிறைவேற்றாமல் இருந்த குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் கல்விச் சுற்றுலாவுக்கு வேண்டிய பண உதவி செய்வீர்கள்.
வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்த அதிகரிக்கும். இருப்பினும் சரியான நேரத்தில் வேலைகளை முடித்து விடுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்தில் பணி மாற்றம் ஏற்படலாம். அதிகாரிகளின் ஆதரவை எதிர்பார்ப்பது பயன் தராது. அரசுப் பணியில் உள்ளவர்கள் கவனமுடன் வேலை பார்க்க வேண்டும். மாதத்தின் பிற்பகுதியில் சில சிரமங்களை சந்திக்கலாம்.
தொழில் வியாபாரத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். போட்டியாளர்களால் சில சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் பாதிப்புகளைத் தாண்டி வந்து விடுவீர்கள். வியாபார கணக்கு வழக்குகளை சரியாகக் கையாள வேண்டும்
வேலை பார்க்கும் பெண்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம். பதவி உயர்வு உண்டாகலாம். சில சலுகைகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தை நிர்வாகம் செய்கின்ற பெண்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வசதி வாய்ப்புடன் இருப்பார்கள்.
அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 18 21 22 23 24 25 30 அக்டோபர் 3 4 5 7 8 10 15 16
அதிர்ஷ்ட எண்கள்: 9,3,8,5
சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 3 அதிகாலை முதல் 4 5 அதிகாலை வரை.
பரிகாரம்: முருகப்பெருமான் வழிபாடும், 'ஓம் முத்தமிழ் வடிவே முதல்வா போற்றி, அகத்தியருக்கு அருளிய ஆண்டவா போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.
| தேதி | 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm) |
| நட்சத்திரம் | மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm) |
| யோகம் | சித்த-அமிர்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | உத்திராடம், திருவோணம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:51 PM |
| சந்திரோதயம் | Oct 07 2:51 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 07 3:36 PM |