துலாம் மாதாந்திர ராசிபலன் - Libra Monthly Horoscope in Tamil

துலாம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Thulam rasipalan): துலாம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம்ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களே...

புரட்டாசி மாத ஆரம்பத்தில் வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். உறவினர்களால் மனச்சங்கடங்கள் உண்டாகலாம். ஆகவே, பொறுமையுடன் நடந்து கொள்வது மிகவும் முக்கியம். கணவன் மனைவிக்கு இடையே சலசலப்புகள் உண்டாகலாம் என்றாலும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போனால் சரி செய்து கொள்ளலாம். இருப்பினும் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் இருக்கும். சுப நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து வருவதால் உறவினர்களின் வருகை குடும்பத்தில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.

கையில் காசு தாராளமாக புழங்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களும் வாங்குவீர்கள். அதற்காக கையிருப்பை செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வரும். உறவினர்களும் ஒத்தாசையுடன் நடந்து கொள்வார்கள். வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முனைப்பு காட்டுவீர்கள். வெளிமாநிலங்களுக்கு சென்று வருகின்ற வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தினரோடு கோயில் தலங்களுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பிள்ளைகளின் வேலைக்காகவும் படிப்புக்காகவும் முக்கிய நபரை சந்திப்பீர்கள்.

பணிச் சுமையால் கொஞ்சம் மனச்சுமை ஏற்படும். அதே நேரத்தில் உங்களுக்கு கொடுத்த வேலைகளை அலுவலகத்தில் சிறப்பாக செய்வீர்கள். அதனால் மேலதிகாரிகளின் அன்பும் பாராட்டும் கிடைக்கும். மாத பிற்பகல் பகுதியில் சில சிக்கலான வேலைகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தொழிலை விரைவு செய்து அதற்கான பலனை காண்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடக்கும். எதிர்ப்புகளும் இடையூறுகளும் மறைந்து போகும். அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வேலை பார்க்கும் பெண்களுக்கு சலுகைகளும் ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 19 20 25 26 27 28 30 அக்டோபர் 1 2 4 7 8 10 12 13 15 16

அதிர்ஷ்ட எண்கள்: 6,9,4,3

சந்திராஷ்டம நாள்கள்: அக்டோபர் 1 காலை முதல் 2 3 அதிகாலை வரை.

பரிகாரம்: பெருமாள்  வழிபாடும்,
'ஓம் ஹரி ஹரி போற்றி,
ஓம் ஸ்ரீ ஹரி போற்றி'
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+