Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: துலா ராசி (Libra)

துலா ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Thulam rasipalan): துலா ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம்ராசி பலன்

சுக்கிர பகவானின் ஆசியும் செவ்வாய், ராகு, குரு ஆகியோரின் ஆதிக்கமும் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!

2026 ஆங்கில புத்தாண்டு பல அற்புதமான பலன்களை கொண்டு வருகின்ற வகையில் அமைந்திருக்கிறது. எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து விட்டீர்கள், வேலை இடத்தில் ஏற்பட்ட சிக்கலை பார்த்திருக்கிறீர்கள், வியாபாரத்தில் சறுக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அனைத்தும் விலகி சிறப்பான பலன்கள் கிடைக்கும். தொழிலில் அதிகப்படியான லாபத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்கு சொந்தமாக தொழிலில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.  புதிய நண்பர்களின் வரவால் வியாபாரம் செழித்து ஓங்கும். தொழிலுக்கு ஏற்பட்ட சிக்கலை தீர்க்க பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தங்க நகைகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சொத்து சுகம் சேரும்.

கிரக சஞ்சார பலன்கள்:

சனி பகவான் சஞ்சாரம்:

ரோகஸ்தானத்தில் இருக்கின்ற சனி பகவானால் சாதக பாதகமான நிலையை நீங்கள் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். தொழிலுக்கு திடீர் எதிர்ப்புகள் உருவாகும். ஆனால் அதைத் தாண்டி வருவீர்கள். வியாபாரத்தில் அரசாங்க சிக்கல்கள் ஏற்படலாம். அதற்கும் விடிவு பிறக்கும். ஆனால், வியாபார எதிரிகளின் தந்திரங்களை சனி பகவான் முறியடித்து வைப்பார்.

ராகு கேது சஞ்சாரம்:

ராகு கும்பத்தில் இருக்கிறார். கேது சிம்மத்தில் நிற்கிறார். இவை உங்கள் ராசிக்கு 5 ஆம் இடம், 11-ஆம் இடம். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். புதிய முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி ஏற்படும். நவம்பர் 13 ஆம் தேதி ராகு மகரத்திற்கு வருகிறார். கேது கடகத்திற்கு செல்கிறார். இந்தப் பெயர்ச்சி வருமானத்தை பெருக்கும். பொருளாதார நிலையை மேம்படுத்தும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை உருவாக்கும்.

குருபகவான் சஞ்சாரம்:

பாக்கியஸ்தானத்தில் இருக்கின்ற குரு பகவான் உங்களுக்கு யோக மழை பொழிய காத்திருக்கிறார். எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். வருடக் கடைசியான அக்டோபர் 20 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு வருகிறார். இதுவும் அற்புதமான நிலை ஆகும். கடன் பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். புதிய தொழிலுக்கு தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். வீட்டு மனை வாங்க கூடிய நிலை உருவாகும். நீண்ட காலமாக ஆசைப்பட்ட புதிய வீடு கட்டும் வாய்ப்பு கிட்டும். சுபமான பலன்களை குரு பகவான் அள்ளித் தருவார்.

சூரியன் சஞ்சாரம்:

இந்த வருடம் 12 ராசிகளில் பயணம் செய்யும் சூரிய பகவான் உங்களுக்கு நற்பலன்களை தருகின்ற காலகட்டங்களில் குறிப்பிடத்தக்கவை இவை.

ஏப்ரல் 14 மே 14
ஜூன் 15 ஜூலை 16
அக்டோபர் 18 நவம்பர் 16

இந்த பயண காலங்களில் உங்களுக்கு எதிர்ப்புகளே இல்லாமல் நன்மைகள் நடக்கும். உறவுகள் மத்தியிலும் சமுதாயத்திலும் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் உங்களின் தேவையை மேலதிகாரிகள் உணர்வார்கள். அரசியல்வாதிகளுக்கு உத்வேகத்தை கொடுக்கின்ற வகையில் சூரியன் விளங்குகிறார். அரசாங்க உதவிகள் தாராளமாக கிடைக்க சூரியன் துணை நிற்பார். வேலை நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துவார்.

பொது பலன்கள்:

2026 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். உறவுகள் உங்களை மரியாதைவுடன் பார்ப்பார்கள். பண வரவு தாராளமாக இருக்கும்.

குடும்பம்: பிரச்சனை இல்லாத குடும்பம் எங்கு இருக்கிறது. இருந்தாலும் அது கட்டுக்குள் வைத்திருக்கும் நிலையையும் ஒரு கட்டத்தில் தீர்க்கின்ற வாய்ப்பையும் சூரியன் ஏற்படுத்துவார்‌

திருமணம்: கல்யாணத்திற்காக காத்திருக்கும் இளைய வயதினருக்கு திருமண வாய்ப்பு கைகூடும்.

அரசியல்: அரசியல்வாதிகள் சிலருக்கு அவப்பெயர் உண்டாகலாம். அதை மாற்றி வெற்றி வாய்ப்பை பெற வேண்டும்.

கலைத்துறை: கலைஞர்கள் வெளிநாட்டு வாய்ப்பு பெறுவார்கள். புதிய முயற்சியால் பெரிய இயக்குனர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.

வியாபாரம்: சிறுகடை வியாபாரிகள் கூட பெரிய அளவில் லாபம் பெறுவார்கள். தொழில் தொய்வில்லாமல் நடக்கும்.

நட்சத்திர பலன்கள்:

சித்திரை 3, 4 ஆம் பாதம்:


நற்பலன்களைப் பெறுகின்ற ஆண்டாக இது இருக்கும். சிக்கலான சூழ்நிலைகள் விலகிப் போகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும்.

தொழில்: தொழில் ஸ்தானமும் லாப ஸ்தானமும் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இயங்காத தொழிற்சாலை கூட இயங்கும் நிலை உருவாகும். எந்த தொழிலாக இருந்தாலும் அக்கறையுடன் பார்த்தால் அற்புதமான லாபத்தை பெறுகின்ற வாய்ப்பை பெறலாம். பங்கு சந்தையும் கணிசமான லாபத்தை கொடுக்கும்.

பணியாளர்கள்: பதவி உயர்வை எதிர்பார்க்கிறீர்களா? கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு உங்களுக்கு உண்டு. பொறுப்புடன் வேலை பார்க்க வேண்டும்.

பெண்கள்: பெண்களுக்கு பெருமையும் மதிப்பும் சேரும். கணவனை இழந்தவர்களுக்கு மறுமண வாய்ப்பு மலரும்.

ஆரோக்கியம்: ஒரு நோய் மறைந்தால் இன்னொரு நோய் வருகின்ற நிலை மாறி சரியான மருத்துவத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சுவாதி:


சுபிட்சமான வருடமாக இது அமையும். அலைச்சல் அதிகமானாலும் ஆசைப்பட்ட காரியம் கண்டிப்பாக நடக்கும். உறவினர்கள் உங்களை உயரத்தில் வைப்பார்கள்.

தொழில்: சனி பகவான் அற்புதமான இடத்தில் அமர்ந்திருக்கிறார். எதிர்ப்புகளை முறியடித்து தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். வாகன தொழில் வசப்படும். மின்சாதன பொருட்கள், அழகு சாதனங்கள், ரியல் எஸ்டேட் போன்றவை உங்களுக்கு ஏற்றத்தை கொண்டு வரும். திரையுலகத்தினரும் புதிய வாய்ப்புகள் பெற்று வருமானத்தை பெருக்குவார்கள்.

பணியாளர்கள்: அலுவலக ஊழியர்களுக்கு வேலை அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அதற்குரிய பாராட்டும் மதிப்பும் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியமும் பெறுவார்கள்.

கல்வி: கொஞ்ச நேரமாக இருந்தாலும் அக்கறையுடன் படிக்க வேண்டும். மாணவர்கள் அதிக நேரம் செல்போன் பார்க்க கூடாது.

ஆரோக்கியம்: வெளிப்பிரச்சினையை வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம். மன அழுத்தம் தூக்கத்தை கெடுக்கும். இருப்பினும் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படாது.

விசாகம் 1,2,3 :


எந்த வகையிலாவது கையில் பணம் புரளும். தொழில்துறைகளில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அதனால் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகமானாலும் அதற்குரிய பலனை பெறுவீர்கள். லாபம் உங்களை மகிழ்ச்சி படுத்தும்.

தொழில்: எதிரிகளால் இடையூறு ஏற்பட்டாலும் தொழில் வளர்ச்சி பாதிக்காது. நீங்கள் போடுகின்ற உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். அனைத்துத்துறை வர்த்தகங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்கள்: மிகுதி நேரப் பணி செய்வதால் வருமானம் அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் குறிப்பிட்டத்தக்க பலனை அடைவார்கள்.

பெண்கள்: வேலை பார்க்கும் பெண்களின் தேவைகள் தடையில்லாமல் பூர்த்தியாகும். குடும்பத்தில் கணவனின் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

ஆரோக்கியம்: வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வயிற்றுப் பிரச்சனை ஏற்படலாம். இருப்பினும் மற்ற வகையில் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது.

தேதி 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am)
நட்சத்திரம் அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் அசுவினி, பரணி
சூரியோதயம் 6:23 AM
சூரிய அஸ்தமனம் 6:15 PM
சந்திரோதயம் Mar 11 12:08 AM
சந்திர அஸ்தமனம் Mar 11 11:34 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+