Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மேஷ ராசி (Aries)

மேஷ ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Mesham rasipalan): மேஷ ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்ராசி பலன்

 

செவ்வாயின் அனுக்கிரகத்தையும் கேது சுக்கிரன், சூரியன் ஆதிக்கத்தையும் உடைய மேஷ ராசி அன்பர்களே!

நினைத்த காரியங்கள் தடையில்லாமல் நடக்கின்ற காலமாக இந்த ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு அமையும். ஆயிரம் நெருக்கடிகள் கடந்த காலங்களில் இருந்தாலும் அவையெல்லாம் விலகி நீங்கள் எதிர்பார்க்கின்ற நல்ல காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புகிறீர்களா இருக்கின்ற தொழிலை மேம்படுத்த நினைக்கின்றீர்களா? தைரியமாக அதை செயல்படுத்துங்கள். புதிய வழித்தடத்தில் சிறந்த நன்மைகள் வந்து சேரும். மனை இடம் வாங்கலாம். பொன் பொருள்களை சேர்க்கலாம். மகிழ்ச்சியை அள்ளி வழங்குகின்ற ஆண்டாக இது அமையும்.

கிரக சஞ்சார பலன்களை பார்க்கலாம்.

சனி பகவான் சஞ்சாரம்:

சனிபகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். இந்த வருடத்தில் அவர் அந்த ராசியிலேயே மையம் கொண்டிருக்கிறார். உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் அயன சயன ஸ்தானம் என்பதால். குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் தோன்றலாம். ஆனால் அவையெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் மறையும். செலவுக்கு தகுந்த வரவு கிடைக்கும்.

ராகு கேது சஞ்சாரம்:

ராகு உங்கள் ராசிக்கு 11 இடமான கும்பத்தில் இருக்கிறார். கேது ஐந்தாம் இடமான சிம்மத்தில் அமர்ந்திருக்கிறார். இது உங்களுக்கு மிகவும் யோகம் தருகின்ற அமைப்பு. ஆரோக்கியம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான லாபம் உண்டாகும்.

நவம்பர் 13 ஆம் தேதி ராகு மகரத்திலும் கேது கடகத்திலும் நிற்கின்ற நிலை மாறுதல் ஏற்படுகிறது. இதுவும் உங்களுக்கு தொழில் ரீதியாக வருமானத்தை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் இருக்கின்ற தடங்கல்கள் விலகும். முன்னேற்றம் ஏற்படும்.

குரு பகவான் சஞ்சாரம்

மிதுனத்திலிருந்து அதிசாரமாக கடகத்தில் அமர்ந்த குரு பகவான் மீண்டும் மிதுனம் சென்று கடகம் வந்து அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி சிம்மத்திற்கு இடம்பெயர்கிறார். சுகஸ்தானத்திலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்கின்ற குரு பகவான் தொழிலுக்கு இருக்கின்ற இடையூறுகளை களைவதற்கான வாய்ப்பு ஏற்படுத்துவார். வீட்டு மனை வாங்கும் யோகத்தை ஏற்படுத்துவார். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலை செல்வம் சித்திக்கும். உறவினர்கள் மத்தியில் உயர்ந்த செல்வாக்கு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். கணவன் மனைவிக்கு இடையே கலகலப்பை ஏற்படுத்துவார். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை கொடுப்பார்

சூரியன் சஞ்சாரம்:

பிப்ரவரி பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 வரை கும்பத்திலும் ஜூன் 15 முதல் ஜூலை 16 வரை மிதுனத்திலும் அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை துலாத்திலும் சூரியன் சஞ்சரிக்கும் காலம் மிக அதிகமான லாபத்தை கொடுப்பார். அரசு ஊழியர்கள் கை நிறைய சம்பளம் பெறுவார்கள். எடுத்துக் கொண்ட முயற்சிகள் தடையில்லாமல் நடக்கும். வெளிநாடு சல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

பொது பலன்கள்:

2026 ஆறாம் ஆண்டில் வாழ்க்கைத் தரம் உயரும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு மரியாதையும் ஏற்படும்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வார்கள். திருமணத்திற்காக காத்திருந்த இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் கண்டிப்பாக திருமணம் நடந்தேறும்.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். பதவியில் இருப்பவர்கள் பழைய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள்.

கலைத்துறை: கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திரை துறையில் முத்திரை பதிப்பார்கள். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வார்கள். சொத்துச் சேர்க்கையும் உண்டாகும்.

நட்சத்திர பலன்கள்:

அஸ்வினி:


சந்தோஷம் நிறைந்த ஆண்டாக அமையும். உங்களுடைய தொழில் நெருக்கடிகள் விலகும். எடுத்து வைக்கும் அடியில் தடையில்லாமல் வெற்றி பெறுவீர்கள்.

தொழில்: லாப ஸ்தானத்தின் அதிபதியான சனி 12 இல் இருப்பதால் சில நேரங்களில் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் எலக்ட்ரானிக், மருந்தகம், கெமிக்கல், இடம் வாங்கி விற்கும் தொழில், பங்குச்சந்தை வியாபாரம் ஆகியவை சூடு பிடிக்கும்.

பணியாளர்கள்: பொறுப்பாக வேலை செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். பதவி மாற்றம் ஏற்படலாம். உயர்வு கிடைக்கலாம். சம்பள அதிகரிப்பும் ஏற்படும்.

பெண்கள்: பெண்களின் ஆசைகள் நிறைவேறும் ஆண்டு. குடும்பத்தினர் உங்களை பெரிதும் போற்றுவார்கள். வாழ்க்கை இழந்த பெண்ணுக்கு மறுமண வாய்ப்பு ஏற்படலாம்.

ஆரோக்கியம்: சின்ன சின்ன உபாதைகள் கொடுத்த நோய் தொந்தரவு விலகும். மருத்துவ ரீதியான சிகிச்சைகள் நல்ல பலன் அளிக்கும்.

பரணி :


யோகமான நிலை கூடி வரும். குறித்த நேரத்தில் வேலையை முடித்து சாதனை செய்வீர்கள். உறவினர் இடத்திலும் சமூகத்திலும் அந்தஸ்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.

தொழில்: தொழிலில் மேன்மை உண்டாகும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மின்சாதன பொருட்கள், அழகு சாதனங்கள், கொடுக்கல் வாங்கல், ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பணியாளர்கள்: அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்களும் பலனடைவார்கள். தனியார் துறை ஊழியர்களுக்கும்  எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்.

ஆரோக்கியம்: உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருக்காது. சின்ன சின்ன தொந்தரவுகள் இருந்தாலும் சிக்கலை ஏற்படுத்தாது.

கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதம்:


எதிர்பார்த்த நன்மைகள் தேடி வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

தொழில்: தொழிலில் இருந்த எதிர்ப்புகள் விலகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கவனம் செலுத்துவீர்கள். கணினி துறை, சினிமா, சின்னத்திரை, கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் கணிசமான பலன் கிடைக்கும்.

பணியாளர்கள்: உங்களின் வேலை திறனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.

பெண்கள்: வேலைக்குச் செய்யும் செல்லும் பெண்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சித்திக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

ஆரோக்கியம்: பெரிய நோய் பாதிப்புகள் ஏற்படாது. சாதாரண சிகிச்சையிலேயே சின்ன சின்ன உடல் பாதைகள் தேறி உடல் நிலை முன்னேற்றம் அடையும்.

தேதி 17 - பங்குனி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி திரயோதசி (up to 6:56 am) சதுர்தசி (up to April 01, 7:06 am)
நட்சத்திரம் பூரம் (up to 3:20 pm) உத்திரம் (up to April 01,4:17 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் திருவோணம், அவிட்டம்
சூரியோதயம் 6:09 AM
சூரிய அஸ்தமனம் 6:16 PM
சந்திரோதயம் Mar 31 4:59 PM
சந்திர அஸ்தமனம் Apr 01 5:21 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+