Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மிதுன ராசி (Gemini)

மிதுன ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Midhunam rasipalan): மிதுன ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்ராசி பலன்

பகவானின் அருளும் செவ்வாய், ராகு, குரு ஆகியோரின் ஆதிக்கத்தோடு இருக்கும் மிதுன ராசி அன்பர்களே!

2026 ஆம் ஆண்டு மேன்மையான பலன்களை தருகின்ற வருடமாக மலர்கிறது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள்.  தொழிலில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் மிகுந்த உற்சாகத்தோடு உழைப்பீர்கள். அதற்குரிய பலனையும் அடைவீர்கள். வேலை பார்த்த சிலர் சொந்தமாக தொழில் செய்யும் நிலைக்கு உயர்வார்கள். சொத்து சுகம் கிடைக்கும். ஆபரண யோகமும் உண்டாகும். அதையும் தாண்டி செல்வாக்கு உயரும் ஆண்டாக இது அமையும்.

சனி பகவான் சஞ்சாரம்:

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
உங்களுடைய தொழிலுக்கு உதவி செய்யும் நிலையில் சனி பகவான் இருக்கிறார். எதிர்பார்த்த லாபத்தை அடையும் நிலை உண்டாகும். வருமானம் பெருகி கையிருப்பு கூடும்.

ராகு கேது சஞ்சாரம்:

ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். கேது விஜய வீரிய ஸ்தானத்தில் இருக்கிறார். இது ஒரு சிறப்பான நிலை ஆகும். இந்த காலகட்டத்தில் எதிரிகள் மறைந்து போவார்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். ஆலய சுற்றுலா மேற்கொள்வீர்கள். நவம்பர் 13ஆம் தேதி ராகு மகரத்திற்கும் கேது கடகத்திற்கும் இடம் மாறுகிறார்கள். இது சில ஏற்ற இறக்கமான பலன்களை தரலாம். குடும்பத்தில் அனுசரிச்சு போவது நல்லது.

சூரியன் சஞ்சாரம்:

மார்ச் 15 ஏப்ரல் 13

ஜூலை 17 ஆகஸ்ட் 17

செப்டம்பர் 18 அக்டோபர் 17

இந்த காலகட்டத்தில் உறவினர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் உண்டாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். சொத்து சம்பந்தப்பட்ட சூரியன் வழக்குகளை உங்களுக்கு சாதகமாக்குவார். தொழிலில் சில மாற்றங்களை கொண்டு வருவார். அரசியல்வாதிகளின் நிலையில் தடுமாற்றம் உண்டாகும். வெளிமாநிலங்களுக்கு வேலை நிமித்தமாக செல்வீர்கள்.

பொதுப் பலன்கள்:

இந்த ஆண்டில் உங்களுடைய வாழ்க்கையில் உயர்வும் சிறப்பும் உண்டாகும். பொருளாதார நிலையில் வருமானம் அதிகரிக்கும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன சச்சரவுகள் மறைந்து போகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்ற நிலை உண்டாகும். வாகன யோகம் ஏற்படும்.

அரசியல்: அரசியல்வாதிகளுக்கு போராட்டமான நிலை ஏற்படும். இருப்பினும் வெற்றி உண்டாகும்.

கலைத்துறை: கலைத்துறையினர் முன்னேற்ற பாதையில் கால் தடம் பதிப்பார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

வியாபாரம்: ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள்.

நட்சத்திர பலன்கள்:

மிருகசீரிடம் 3,4 ஆம் பாதம்:


நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். முயற்சிகளில் இடையூறு ஏற்பட்டாலும் லாபம் உண்டாகும்.

தொழில்: தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் இருப்பதால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் ஏற்றம் உண்டாகும். இயந்திரத் தயாரிப்பு தொழில் வெற்றிகரமாக நடக்கும். பங்குச்சந்தையில் கவனமுடன் ஈடுபட வேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்கும்.

பணியாளர்கள்: அரசு வேலையில் இருப்பவர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட தாமதமாகலாம். ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்.

பெண்கள்: வேலைக்குச் செல்லும் பெண்கள் விருப்பப்பட்டதை வாங்கும் நிலை உண்டாகும். சிலருக்கு திருமண யோகம் ஏற்படும். வாழ்வை இழந்த பெண்களுக்கு மறுமண வாழ்க்கை சித்திக்கும்.

ஆரோக்கியம்: உடல் நிலையில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். மருத்துவரின் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

திருவாதிரை:


பொருளாதார உயர்வு மன மகிழ்ச்சியை கொண்டு வரும். அலுப்பில்லாமல் வேலை செய்து நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

தொழில்: எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். இரும்புத்தொழில் சிறப்பாக நடக்கும்.  வாகனம் வாங்கி விற்கும் தொழிலும் செய்யலாம். ரியல் எஸ்டேட் தொழில் கைகொடுக்கும்.

பணியாளர்கள்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பான ஆண்டு இது. தனியார் துறையிலும் ஊழியர்கள் தங்கள் மதிப்பை உயர்த்துவார்கள்.

கல்வி: பிள்ளைகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும். விரும்பிய இடத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கியம்: உடல் நிலையில் பாதிப்பு இருக்காது. மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்:


தடைப்பட்ட காரியங்கள் நல்ல முறையில் நடந்து மனதிற்கு திருப்தியை கொடுக்கும்.
தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் மூலதனத்தை அதிகரிப்பீர்கள்.

தொழில்: கடந்த கால சறுக்கள் மாறி தொழிலில் மேன்மை உண்டாகும். கையில் தாராளமாக பணம் புரளும். கணினி தொழில் சிறப்பாக இருக்கும். சினிமா துறையும் கை கொடுக்கும். சின்னத்திரை, பங்கு பரிவர்த்தனை மேன்மை அடையும்.

பணியாளர்கள்: மேலதிகாரிகளின் பாராட்டுகளால் பூரிப்பு உண்டாகும். வருட நடுப்பகுதியில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் வந்து சேரும்.

பெண்கள்: குடும்பத்தை கட்டிக் காக்கும் பெண்கள் கெட்டிக்காரத்தனத்தால் வெற்றி பெறுவார்கள். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

ஆரோக்கியம்: அண்மைய காலங்களில் தொந்தரவு செய்த சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.

தேதி 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am)
நட்சத்திரம் அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் அசுவினி, பரணி
சூரியோதயம் 6:23 AM
சூரிய அஸ்தமனம் 6:15 PM
சந்திரோதயம் Mar 11 12:08 AM
சந்திர அஸ்தமனம் Mar 11 11:34 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+