தனுசு ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Dhanusu rasipalan): தனுசு ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குரு பகவானின் அருட்கடாட்சமும் கேது, சுக்கிரன், சூரியன் ஆகியோரின் ஆதிக்கமும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
2026 ஆங்கில புத்தாண்டு உங்களுக்கு அமோகமான பலன்களை அள்ளித் தரப் போகிறது. சிற்சில சிரமங்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவையெல்லாம் மாறி உயர்வான ஒரு இடத்திற்கு உங்களை கொண்டு செல்லும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப் படிகளாக மாறும். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறி அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களின் அந்தஸ்தும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்கால வாழ்க்கைக்கான புதிய பாதை உங்களுக்கு தெரியும். சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
கிரக சஞ்சார பலன்கள்
சனி பகவான் சஞ்சாரம்:
இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்களின் சுக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சில நேரங்களில் குடும்பத்தில் புரிந்துணர்வு இல்லாமல் இருந்தாலும் அனுசரித்துப் போவதால் கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்திற்கு குறைவிருக்காது.
ராகு கேது சஞ்சாரம் :
ராகு மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கேது ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு பல நற்பலன்களை கொண்டு வரும். எதிர்பாராத நல்ல சம்பவங்கள் நடக்கும். அரசாங்க உதவிகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு மன நிம்மதி கிடைக்கும். நவம்பர் 13 ராகு, கேது இடமாறுகிறார்கள். இரண்டாம் இடத்திற்கும் எட்டாம் இடத்திற்கும் வருகிறார்கள். இந்த காலத்தில் அதிகமாக கோபத்தை வெளிக் காட்டக்கூடாது. எதிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பொருளாதார நிலையில் சுணக்கம் ஏற்படாது. வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
குரு பகவான் சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதன் குரு எட்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம குரு கஷ்டமும் கவலையும் என்று கூறுவார்கள். இருப்பினும் மற்ற கிரகங்களின் அனுகிரகத்தால் யோகமான பலன்கள் நடக்கும். குரு பொருளாதாரத்தை உயர்த்துவார். எதிர்ப்புகளை முறியடிக்க வைப்பார். அக்டோபர் 20ஆம் தேதி குரு சிம்மத்திற்கு செல்கிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். சொந்த தொழில் செய்பவராக இருந்தாலும் வேலை செய்பவராக இருந்தாலும் கையில் காசு தங்கும். குடும்பத்தில் வருட இறுதியில் சுப நிகழ்வுகள் நடக்கும்.
சூரியன் சஞ்சாரம் :
சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மிகவும் ஏற்றமான பலன்களை தருகின்ற வகையில் அமைகின்றது.
பிப்ரவரி 13 மார்ச் 14
ஜூன் 15 ஜூலை 16
அக்டோபர் 18 நவம்பர் 16
ஆகிய காலகட்டத்தில் வாழ்க்கையில் சிறப்பான சம்பவங்கள் நடக்கும். செல்வாக்கு உயரும். கெடுதல் நினைப்பவர்கள் கெட்டுப் போகின்ற நிலை உருவாகும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமைய சூரியன் துணையாக இருப்பார். அரசு வழி முயற்சிகளை வெற்றி பெற வைப்பார். வெளிநாட்டிற்கு செல்லும் ஆசையை பூர்த்தி செய்வார். வியாபாரத்தை தொய்வில்லாமல் நடத்தி வைப்பார்.
பொது பலன்கள் :
2026 ஆம் ஆண்டில் பொருளாதார உயர்வு உங்களை செல்வாக்கு மிக்கவராக மாற்றும். வாழ்க்கைத் தரம் உயர்ந்து மற்றவர்களை பிரமிக்க வைக்கும்.
குடும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். சந்தோஷம் பெருகும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். தங்க நகை வாங்க வாய்ப்பு கிடைக்கும். வாகன வசதி ஏற்படும்.
திருமணம்: தாய்மாமன் முயற்சியால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் திருமண பந்தம் ஏற்படும்.
அரசியல்: அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்பட்டு தலைமையின் அன்பை பெற வேண்டும்.
கலைத்துறை: கலைத்துறையினர் சுபிட்சமான சூழ்நிலைக்கு நகர்வார்கள். புதிய முயற்சியில் பெரிய வெற்றி பெறுவார்கள்.
வியாபாரம்: வேலை ஆட்களின் உதவியால் வியாபாரம் சிறப்படையும். புதிய கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.
நட்சத்திர பலன்கள் :
மூலம் :
நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆண்டாக இது அமையும். இடையூறுகள் விலகும். எந்த முயற்சியாக இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.
தொழில்: தொழில் ஸ்தானமும் லாப ஸ்தானமும் வலுவாக இருப்பதால் தொழில்துறையில் எதிர்பாராத நன்மை உண்டாகும். நஷ்டமடைந்த தொழிலில் உங்களின் கை பட்டால் லாபமாக மாறும். கட்டுமானத்துறை, பங்கு பரிவர்த்தனை வியாபாரம், இடம் வாங்கி விற்கும் தொழில், மருத்துவத்துறை ஆகியவை மேன்மையான நிலையில் நடக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு வெகுமதி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை வந்து சேரும்.
பெண்கள்: பெண்களுக்கு இந்த ஆண்டு இன்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்தும். ஆசைப்பட்ட சில காரியங்கள் தடையில்லாமல் நடக்கும்.
ஆரோக்கியம்: உபத்திரவம் தருகின்ற நோய் தொந்தரவை பார்த்து அச்சப்பட வேண்டாம். மருத்துவ சிகிச்சையில் ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம்:
அதிர்ஷ்ட தேவதை ஆனந்த அழைப்பு விடுக்கும் ஆண்டு இது. எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். பெருமையும் சிறப்பு அதிகரிக்கும்.
தொழில்: சனிபகவானின் அனுக்கிரகத்தால் வாகன யோகம் ஏற்படும் பார்டர்களின் உதவி தொழிலுக்கு பக்கபலமாக அமையும். மின்சார சாதன பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். இடம் வாங்கி விற்கும் தொழில் லாபத்தை தரும். திரையுலகினர் புதிய அத்தியாயம் படைப்பார்கள்.
பணியாளர்கள்: தனியார் துறை ஊழியர்கள் உயர்வு பெறுவார்கள். மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் வேலைத்திறன் மேலதிகாரிகளின் பாராட்டை பெறும். பதவி உயர்வு உண்டு.
கல்வி: மாணவர்கள் எதிர்கால நலன் கருதி படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியரின் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும்.
ஆரோக்கியம்: உடல் நிலையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இருந்தாலும் மருத்துவ சிகிச்சையின் மூலம் அது தீர்க்கப்படும்.
உத்திராடம் 1 ஆம் பாதம்:
சீரும் சிறப்பு உங்களைத் தேடி வரும். வியாபாரம், தொழில்துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நினைப்பதை நிறைவேற்றுவீர்கள், நடப்பதை நினைப்பீர்கள். எந்த முயற்சியும் வெற்றி அளிக்கும். புதிய தொழிலுக்கு பாதை தெரியும்.
தொழில்: வியாபாரத்திற்கு இருந்த தடைகள் விலகும். பொருளாதார மேன்மை உண்டாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபத்தை கொடுக்கும். கணினி துறை சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொழில் வருமானத்தை கூட்டும்.
பணியாளர்கள்: வேலையை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். உங்கள் மதிப்பை அது அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் அதிக நன்மைகளை அடையும் ஆண்டு இது.
பெண்கள்: சிறப்புடன் வேலை செய்து நல்ல பலனை அடைவார்கள். திருமண வாய்ப்பு கைகூடும். குழந்தை பாக்கியம் சித்திக்கும்.
ஆரோக்கியம்: நீண்ட நாளாக பாதிப்புகளை தந்த நோய் தாக்கம் நீங்கும். சுறுசுறுப்பாக இயங்கும் அளவிற்கு உடல்நிலை மாறும்.
| தேதி | 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am) |
| நட்சத்திரம் | அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | அசுவினி, பரணி |
| சூரியோதயம் | 6:23 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:15 PM |
| சந்திரோதயம் | Mar 11 12:08 AM |
| சந்திர அஸ்தமனம் | Mar 11 11:34 AM |