கடக ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Kadagam rasipalan): கடக ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சந்திரனின் அருளும் குரு, சனி, புதன் ஆளுமையும் பெற்ற கடக ராசி அன்பர்களே!
2026 ஆங்கில புத்தாண்டு மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் தருகின்ற வகையில் உங்களுக்கு அமையும். பிரச்சனையும் சிக்கல்களும் பின்னி கிடந்தாலும் அவையெல்லாம் விலகி நிற்கும். அடுத்தடுத்து நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க வேண்டுமா... நம்பிக்கையாக இறங்கினால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கக்கூடிய காலம் இது. சொத்து சுகம் சேரும் பாக்கியம் நிறைந்த ஆண்டு. பொன் பொருள் சேர்க்கையும் உண்டாகும்.
கிரக சஞ்சார பலன்கள்:
சனிபகவான் 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பக்குவமாக அமர்ந்திருக்கிறார். இது ஒரு சிறப்பான அம்சமாகும். தடையில்லாமல் தொழில் நடக்கும். சிரமம் இல்லாமல் வியாபாரம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். நினைத்த காரியங்களை செவ்வனே முடிப்பீர்கள். நின்ற காரியங்கள் அனைத்தும் வென்ற காரியங்களாக மாறும்.
ராகு கேது சஞ்சாரம்:
ராகு எட்டிலும் கேது இரண்டிலும் நிற்கிறார்கள். நவம்பர் 13 ஆம் தேதி ஏழாம் இடத்துக்கும் ஒன்றாம் இடத்துக்கும் இடமாறுகிறார்கள். இந்த அமைப்பு குடும்பத்தில் சில பிரச்சனைகளை கொண்டு வரலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை சரியாகப் புரிந்து கொண்டு ராகு கேதுவின் பலன்களை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் பாதிப்பு இருக்காது. பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.
குரு பகவான் சஞ்சாரம்:
குரு பகவான் ராசியில் நிற்கிறார். அதனால் பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்லக்கூடிய நிலை ஏற்படலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்து கடல் கடந்து செல்லக்கூடிய யோகம் உண்டாகும். அக்டோபர் 20 குருபகவான் சிம்மத்திற்கு இடம் மாறுகிறார். பாக்கிய ஸ்தானம் தன ஸ்தானம் என்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். சகோதரர்களிடையே இருந்த சொத்து பிரச்சனை தீரும். உங்களுடைய செயல்களின் மூலமாக வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும்.
சூரியன் சஞ்சாரம்:
ஒரு வருடத்தில் 360 நாழிகையை கடக்கும் சூரியன் நன்மை தீமை கலந்த பலன்களை வழங்குவார். அதே நேரத்தில் சிறப்பான பலன்களையும் வாரி வழங்குவார்.
ஜனவரி 15 பிப்ரவரி 12
மார்ச் 15 ஏப்ரல் 13
ஆகஸ்ட் 18 செப்டம்பர் 17
இந்த காலங்களில் வாழ்க்கையில் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகளில் சூரியன் நிச்சயமாக வெற்றி தருவார். உத்தியோகத்தில் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுப்பார். வியாபாரத்தில் லாபத்தை அதிகப்படுத்துவார். அரசுத்துறை உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் உங்களுக்கு அனுசரணையாக இருக்கும்.
பொது பலன்கள்:
2026 ஆம் ஆண்டில் வாழ்க்கையின் சிறப்பு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் புதிய முன்னேற்றம் ஏற்படும்.
குடும்பம்: சின்ன சின்ன சச்சரவுகளால் சங்கடமாக நகர்ந்த நாட்கள் சந்தோஷ நந்தவனமாக மாறும். கணவன் மனைவிக்கிடையே கருத்து ஒற்றுமை ஓங்கும்.
திருமணம்: பிள்ளைக்கு வரன் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
அரசியல்: அரசியல்வாதிகள் மக்களின் மனதில் இடம் பிடிக்க அயராது பாடுபடுவார்கள். வெற்றியும் பெறுவார்கள்.
கலைத்துறை: கலைத்துறையினர் புதிய முயற்சியில் திறமை வெளிப்படுத்துவார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
வியாபாரம்: விவசாயத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். துணி வியாபாரம் சூடு பிடிக்கும்.
நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 ஆம் பாதம்:
புதிய வெளிச்சம் கிடைக்கும் காலம் இது. இல்லறத்தில் இருந்த இடர்பாடுகள் விலகும்க்ஷ நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றி பெறும்.
தொழில்: லாப ஸ்தானாதிபதி நல்ல முறையில் இருப்பதால் தொய்வடையாமல் தொழில் நடக்கும். இயங்காமல் இருந்த இயந்திரங்கள் எல்லாம் இயக்குவீர்கள். மருத்துவத்தில் இருந்து ரியல் எஸ்டேட் பங்கு பரிவர்த்தன வரை சிறப்பாக நடக்கும்.
பணியாளர்கள்: வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை விட நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
பெண்கள்: குடும்பப் பெண்களுக்கு குதூகலமான ஆண்டாக அமையும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
ஆரோக்கியம்: நீண்ட காலமாக சிரமப்படுத்திய மூட்டு வலி ஒரு முடிவுக்கு வரும். சித்த மருத்துவத்தால் சீர்படுத்தலாம்.
பூசம்:
நினைத்த உதவிகள் வீடு தேடி வரும். முடியுமா என்ற காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழில்: கோச்சார கிரகங்களின் அனுசரணையால் பாதிப்படைந்த தொழில் நிமிர்ந்து நிற்கும். சின்ன முயற்சி பெரிய வெற்றியைத் தரும். வாகனம், மின் சாதனம், அழகு சாதனங்கள், நிலம் வாங்கி நிற்கும் தொழில்கள் லாபத்தை தரும்.
பணியாளர்கள்: தனியார் துறை ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவார்கள். அரசு ஊழியர்களுக்கும் அனுகூலம் உண்டு.
கல்வி: பிள்ளைகள் அக்கறையுடன் படிப்பார்கள். பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆரோக்கியம்: தூக்கமின்மையால் அவதிப்பட்ட நிலை மாறி நிம்மதியான உறக்கத்தை பெறுவீர்கள்.
ஆயில்யம்:
எடுத்துக்கொண்ட முயற்சிகள் வெற்றி தரும். புதிய தொழிலில் கால் தடம் பதிப்பீர்கள். நீங்கள் நினைப்பதை உங்கள் நண்பர் நிறைவேற்றுவார்.
தொழில்: சிரமத்துடன் நடந்த தொழிலை தூக்கி நிமிர்த்துவீர்கள். உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கை கொடுக்கும். கணினித் துறை, சினிமாத் துறை, சின்னத்திரை போன்றவற்றில் உழைப்புக்கு தகுந்த பலன் உண்டு.
பணியாளர்கள்: பணியிடத்தில் வேலைத் திறனை வெளிப்படுத்தி அதிகாரிகளை வசப்படுத்துவீர்கள். பொறுப்போடு வேலை பதவி உயர்வு பெறுவீர்கள்.
பெண்கள்: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன் உண்டு. திருமண காரியங்கள் நடக்கும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும்.
ஆரோக்கியம்: தோல்ப் பட்டை வலியால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருகின்ற வாய்ப்பு ஏற்படும்.
| தேதி | 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am) |
| நட்சத்திரம் | அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | அசுவினி, பரணி |
| சூரியோதயம் | 6:23 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:15 PM |
| சந்திரோதயம் | Mar 11 12:08 AM |
| சந்திர அஸ்தமனம் | Mar 11 11:34 AM |