கன்னி ராசிக்கான இந்த புத்தாண்டு ராசிபலன் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (This Year Kanni rasipalan): கன்னி ராசிகாரர்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பகவானின் புண்ணிய அனுக்கிரகமும் சந்திரன், செவ்வாய், ராகு ஆதிக்கமும் நிறைந்த கன்னி ராசி அன்பர்களே!
2026 ஆம் ஆண்டு உங்களுக்கு புதுமையான பலன்களை தருகின்ற வகையில் அமையும். யோகத்திற்கு குறைவிருக்காது. நீங்கள் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக நடக்கும். நெருக்கடிகள் அனைத்தும் விலகும். எந்த முயற்சியை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பை நண்பர்கள் ஏற்படுத்திக் கொடுப்பார்கள். கமிஷன் தொழிலிலும் கால் பதிப்பீர்கள். வாழ்க்கைப் புத்தகத்தில் இருந்த கரடு முரடான பக்கங்கள் மறையும். துன்பம் விலகி இன்பம் பெருகும் ஆண்டாக இது அமையும்.
கிரக சஞ்சார பலன்கள்:
சனி பகவான் சஞ்சாரம்: சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இந்த வருடம் நிற்கிறார். இது களத்திர ஸ்தானம் என்பதால் குடும்பங்களை எச்சரிக்கையாக நடத்த வேண்டும். வியாபார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். சனி பகவான் வருமானத்தை அதிகரித்து கொடுப்பார்.
ராகு கேது சஞ்சாரம்:
ராகு 5ஆம் இடத்திலும் கேது 11 ஆம் இடத்திலும் நிற்கிறார்கள். இது ஒரு சிறப்பான காலகட்டம். பல முன்னேற்றங்கள் ஏற்படும். கோயில் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பை கொடுக்கும். கோயில் திருப்பணிகள் செய்வதற்கான நிலையும் உண்டாகும். பொருளாதார நிலையில் தொய்வு இருக்காது. வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பொருள் உதவி வந்து சேரும்.
குரு பகவான் சஞ்சாரம்:
குரு பகவான் வக்ரகதியிலிருந்து நிவர்த்தி ஆகி அதிசார நிலை மாறி கடகத்தில் நிற்கிறார். கன்னி ராசிக்கு லாப ஸ்தானம் என்பதால் மிகப்பெரிய மாற்றங்களை தருவார். ஏற்றங்களை கொடுப்பார். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழிலுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை இல்லாமல் செய்து விடுவார். பின்னர் அக்டோபர் 20 ஆம் தேதி குரு சிம்ம ராசிக்கு வருகிறார். இது 12ஆம் இடம் என்றாலும் அவருடைய பார்வை மிகப்பெரிய நன்மைகளை கொண்டு வரும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் சொத்து சுகம் சேர்க்க ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
சூரியன் சஞ்சாரம்: இந்த ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்களில் ஏற்படும் சூரிய பயணம் உங்கள் முயற்சிகளை செயல்பாடுகளை வெற்றிகரமாக மாற்றும்.
மே 15 ஜூன் 14
செப்டம்பர் 18 அக்டோபர் 17
நவம்பர் 17 டிசம்பர் 15
ஆகிய காலகட்டத்தில் வியாபாரம் பெருகி எதிரிகளை கிரங்கடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை உங்களுக்கு சாதகமான நிலைக்கு சூரியன் கொண்டு வருவார். அரசு ஊழியர்கள் நன்மையை பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நிலையை உயர்த்துவார். அரசாங்க உதவிகள் தடையில்லாமல் கிடைக்கும். சூரியனின் அருள் கடாட்சம் வெளிநாட்டு யோகத்தையும் கொடுக்கும்.
பொதுப் பலன்கள்:
2026 ஆம் ஆண்டு உங்களின் ஆசைகள் நிறைவேறும். சிறிய அளவில் இருந்த தொழில் ஓரளவு முன்னேற்றத்திற்கு செல்லும்.
குடும்பம்: குடும்பம் கலகலப்பாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். மனைவி ஆசைப்பட்ட பொருளை கணவர் வாங்கி கொடுப்பார்.
திருமணம்: தடைபட்ட திருமணம் பெரியோரின் ஆசியால் சிறப்பான முறையில் நடக்கும்.
அரசியல்: அரசியல் கட்சியில் இருப்பவர்களுக்கு இது ஒரு போராட்ட காலமாக அமையும்.
கலைத்துறை: கலைஞர்களின் வருமானம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கும்.
வியாபாரம்: புதிய தொழிலை திட்டம் போட்டு செய்வீர்கள். வெளிநாட்டு வர்த்தகத்தை விரைவுபடுத்தலாம்.
நட்சத்திர பலன்கள்:
உத்திரம் 2,3,4 ஆம் பாதம்:
நெருக்கடிகள் விலகி நிம்மதி உண்டாகும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நடக்கும் யோகம் தருகின்ற ஆண்டாக உங்களுக்கு இது அமையும்.
தொழில்: தொழில் ஸ்தானம் புதுனுடைய வீடாக இருப்பதாலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் நிற்பதாலும் எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். இயந்திர பிராப்தி உண்டாகும். அலங்காரப் பொருட்கள், துணிக்கடை, உணவகங்கள், இடம் வாங்கி விற்றல் போன்ற தொழில்கள் சிறப்பான லாபத்தை கொண்டு வரும்.
பணியாளர்கள்: அரசு ஊழியர்களுக்கு அங்கீகாரம் உண்டு. வேலை இடத்தில் மதிப்பு உயரும். ஊதிய உயர்வு கிடைக்கலாம். பதவி உயர்வும் ஏற்படலாம்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் நிறைவாக பலனை அனுபவிக்கும் ஆண்டாக அமையும். மனமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் சித்திக்கும்.
ஆரோக்கியம்: சளி தொந்தரவு ஆண்டின் தொடக்கத்தில் பிரச்சனையை தரலாம். முறையான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் நிவர்த்தியாகும்.
அஸ்தம்:
அலைச்சல் இல்லாமலேயே அனுகூலமான காரியங்கள் நடக்கும். உங்களின் ஆசைப்படி வேலைகளை செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
தொழில்: லாப ஸ்தானம் சிறப்புடன் அமைந்திருப்பதால் வியாபாரத்தில் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தொழிலுக்கு இருந்த இடையூறுகள் விலகி முன்னேற்றமடையும். வாகன தொழில், மின் சாதன தொழில்கள், அழகு சாதனம், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் முன்னேற்றமாக நடக்கும்.
பணியாளர்கள்: அரசுத் துறை, தனியார் துணை பணியாளர்களுக்கு இது அனுகூலம் தரும் ஆண்டு. மதிப்பு உயரும். ஊதிய உயர்வும் கிடைக்கும். இடம் மாறுதல் எதிர்பார்த்தபடி நடக்கும்.
கல்வி: ஆசிரியர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். விரும்பிய இடத்தில் படிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
ஆரோக்கியம்: அல்சர் பிரச்சினையால் அவதிப்பட்ட உங்களுக்கு அதிலிருந்து தீர்வு கிடைக்கும்.
சித்திரை 1,2 ஆம் பாதம்:
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சீரான பலன் கிடைக்கும். தாங்கள் விருப்பப்பட்ட காரியம் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தடையில்லாமல் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் வெற்றிகரமாக நடக்கும்.
தொழில்: எந்த முயற்சியாக இருந்தாலும் தடையில்லாமல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உயர்ந்த வருமானம் கிடைக்கும். கணினித் துறையில் புதிய மாற்றம் உண்டாகும்.
பணியாளர்கள்: வெற்றிகரமாக வேலைகளை முடிப்பார்கள். ஊதிய உயர்வுக்கு தகுதி பெறுவார்கள். பதவி மாற்றமும் உங்களுக்கு கிடைக்கலாம்.
பெண்கள்: வீட்டிலும் வேலை இடத்திலும் மதிப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு ஏற்ற வரன் வரும். குழந்தை பாக்கியம் உண்டாகி ஏக்கம் தீரும்.
ஆரோக்கியம்: மாதவிடாய் பிரச்சனை இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும். இரவு நேரம் அதிகம் கண்விழிக்க வேண்டாம். உடல் ஆரோக்கிய பாதிப்பு சரியாகும்.
| தேதி | 26 - மாசி - விசுவாவசு வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | சப்தமி (up to March 11, 1:54 am) அஷ்டமி (up to March 12, 4:19 am) |
| நட்சத்திரம் | அனுஷம் (up to 7:05 pm) கேட்டை (up to March 11,10:00 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:30 - 8:30 am / 4:30 - 5:30 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | அசுவினி, பரணி |
| சூரியோதயம் | 6:23 AM |
| சூரிய அஸ்தமனம் | 6:15 PM |
| சந்திரோதயம் | Mar 11 12:08 AM |
| சந்திர அஸ்தமனம் | Mar 11 11:34 AM |