மிதுனம் மாதாந்திர ராசிபலன் - Gemini Monthly Horoscope in Tamil

மிதுனம் ராசிக்கான இந்த மாத ராசிபலன் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 18 வரை (This Month Midhunam rasipalan): மிதுனம் ராசிகாரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? இந்த மாதத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களே...

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்று புரட்டாசி  மாதம் புதிய வாய்ப்புகளை உங்களுக்கு பரிசளிக்க போகிறது. இருந்தாலும் வீட்டில் பொறுமை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக நீங்கள் சில தியாகங்களை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்கும். உறவினர்கள் சிலர் ஒத்தாசையாக இருப்பார்கள். சிலர் இடையூறு செய்ய தயங்க மாட்டார்கள். இருந்தாலும் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. நீண்ட நாள் நண்பரின் வருகையால் வீடு கலகலப்பாக மாறும்.

கையில் காசு பணம் தாராளமாக புரளும் என்றாலும் சில அவசியமான செலவுகள் வந்து உங்களை சிரமப்படுத்தும். வீட்டு தேவைக்காக சில பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் கையிருப்பு கரைந்து போகும். உறவினர்கள் வகையில் உங்களுக்கு செலவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். அதிலும் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். சிலர் வெளியூர் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். தலையாத்திரைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக முக்கிய நபர்களின் ஆதரவை நாடுவீர்கள்.

சோர்வின்றி உழைக்க தயங்க மாட்டீர்கள். அதே நேரத்தில் வேலைச்சுமை உங்களை பாதிக்காத நிலையில் இருக்கும். இருப்பினும் வேலையில் கவனம் சிதற விடக்கூடாது. அது உங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தலாம். அதிகாரிகளின் ஆதரவு அவ்வளவாக இருக்காது. அரசு பணியில் இருப்பவர்கள் மாத பிற்பகுதியில் பைல்களை கையாளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வியாபாரம் பரபரப்பாக நடக்கும். தொழிலில் ஏற்றம் உண்டாகும். இருப்பினும் சில சரிவுகளையும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். போட்டியாளர்கள் பிரச்சனையை தருவார்கள். அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணக்கு வழக்குகளில் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம்.

குடும்பத்தை கட்டிக் காக்கும் பெண்கள் தியாகத்தின் பிரதிபலிப்பாக இருப்பார்கள். கணவனின் தேவைக்காக தங்களுடைய கையிருப்பை தருவார்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சிறப்பான உயர்வுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: செப்டம்பர் 20 21 25 27 29 அக்டோபர் 1 3 4 10 12 13 15 16

அதிர்ஷ்ட எண்கள்: 5,9,4,3

சந்திராஷ்டம நாள்கள்:  செப்டம்பர் 22 காலை முதல் 23 24 காலை வரை.

பரிகாரம்: மாரியம்மன் வழிபாடும்,
'ஓம் அம்மையே போற்றி,
ஓம் அம்பிகையே போற்றி' 
பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+